districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு முன்னாள் உறுப்பினர்  பி. இராமமூர்த்தி என்றழைக்கப்படும் பி.ஆரின் 11ஆவது நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு முன்னாள் உறுப்பினர்  பி. இராமமூர்த்தி என்றழைக்கப்படும் பி.ஆரின் 11ஆவது நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி முதலியார்பேட்டை பஞ்சாலை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சத்யா,கலியமூர்த்தி,  பஞ்சாலை கழக முன்னாள் தலைவர் இராமகிருஷ்ணன், முதலியார் பேட்டை கிளை செயலாளர்கள்  ரஞ்சித், நாராயணசாமி, சுப்பிரமணிஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் அஜிஸ் நகரிலுள்ள சிபிஎம் புதுச்சேரி பிரதேச குழு அலுவலகத்தில் உள்ள பி. ராமமூர்த்தியின்  உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

;