districts

கத்தியுடன் 'ரீல்ஸ்' வாலிபர்களை எச்சரித்த போலீஸ்

கும்மிடிப்பூண்டி, ஆக.18-

     கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே காயலார் மேடு பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் பெரிய பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.  

     அந்த வீடியோவில் "தப்பு நடக்கக்கூடாது என்று அடிக்கவில்லை, தப்பு நடக்கனும், அதை நாங்க மட்டும் தான் செய்யணும்'' என்ற பஞ்ச் வசனத்துடன் பட்டாக்கத்தியை எடுத்து காண்பிக்கப்படுகிறது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்தனர். அவர் கள் மீது ஏற்கெனவே எந்த குற்ற வழக்குகளும் இல்லா ததால் அவர்களை போலீ சார் எச்சரித்தனர். லைக்குக்கு ஆசைப் பட்டு  ரீல்ஸ் செய்ததாக இளைஞர்கள் தெரிவித்த னர்.