உடுமலை, நவ.23- 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வன உரிமைச் சட் டத்தை உடனடியாக அமுல்ப டுத்திட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறித்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுப ட்டனர். மலைவாழ் மக்களுக்கு நிலப் பட்டா, வீட்டு மனைப்பட்டா வழங்கி தரமான தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கிட வேண்டும். குடியிருப்பு பகுதிகளுக்குள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்றிட வேண்டும். 2020 சுற்றுச்சூழல் அறிக்கையை கை விட வேண்டும். அனைத்து பழங்குடி மக்களுக்கும் கால தாம தமில்லாமல் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்ங்கத்தினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்ஒருபகுதியாக திருப் பூர் மாவட்டம், உடுமலை கோட் ட்டாச்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்தில், தமிழ்நாடு விவ சாய சங்க மாநில துணைத் தலை வர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட் டச் செயலாளர் ஆர். குமார், விவ சாய தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் சி. சுப்பிரமணியம், விவசாய சங்க நிர்வாகிகள் பால தண்டபாணி, ராஜகோபால், மலைவாழ் சங்க நிர்வாகிகள் மணி யன், குப்புச்சாமி, முருகன், ஆனந் தன், செல்வி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் ஆர்டிஓ அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.சடை யப்பன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனு சாமி, சிபிஎம் மாவட்ட செயலா ளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத் துசாமி, ஆர்.கோமதி, இடைக் கமிட்டி செயலாளர்கள் சி.துரை சாமி, பி.கே.கெம்புராஜ், ஆர்.முரு கேசன் குத்தியாலத்தூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் கே.ஆர்.திருத்தணிகாசலம், உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.