சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி வி.எஸ்.சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக்கல்லூரியில் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு, சிறப்பாக பயின்று வரும் மாணாக்கர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன் ரெட்டி, முனைவர் பி.பொன் முத்துராமலிங்கம் (கல்லூரி கல்வி இணை இயக்குனர், மதுரை மண்டலம்) ,அபிராமி ராமநாதன் (படத் தயாரிப்பாளர் -தொழிலதிபர்), எ.நல்லம்மை அபிராமி ராமநாதன், கல்லூரி முதல்வர் முனைவர் ப.முத்துச்சாமி, ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.