districts

செவரக்கோட்டையில் பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் சிபிஎம், தீ.ஒ.முன்னணி தலையீட்டால் வழக்கு பதிவு

சிவகங்கை, ஜூன் 7- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் செவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் பட்டிய லினத்தைச் சேர்ந்தவர்.  இவரை பனங்குடி கிராமம் ஆரோக்கி யம் மகன் ராபின் தலைமையில், சாதியைச்  சொல்லி இழிவுபடுத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதுகுறித்து ராஜேஷ் கண்ணனின் தாயார் ராஜேஸ்வரி கொடுத்த புகாரை கல்லல் காவல்துறையினர் வாங்க மறுத்து விட்டனர்.

மற்றொருவரின் புகாருக்கு கல்லல் காவல் நிலையத்தில் தவறுதலாக  வழக்கை பதிவு செய்தது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தலையிட்டு முறையிட்டனர். இதன் பின் னரே மேற்படி வழக்கை மாற்றம் செய்து, நகல் வழங்கப்பட்டது.  இதில் முறையான மேல் நடவடிக்கை களை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் ராஜேஷ் கண்ணன் குடும்பத்  தார்கள் மனு அளித்தனர்.  

பாதிக்கப்பட்ட ராஜேஷ் கண்ணன் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் முழு விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத் தார்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்க  கோருவது, நீதி கிடைக்க தொடர்ந்து போராடு வது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி தீர்மானித் துள்ளதாக மாவட்டச்  செயலாளர் ஆர். வீரையா தெரிவித்துள்ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எஸ் .முத்துராம லிங்கபூபதி, மாவட்ட செயலாளர் ஆர். வீரையா, மாவட்ட நிர்வாகிகள், வழக்கறி ஞர் சங்க மாவட்ட செயலாளர் வெ.மதி, தென்னரசு, பி .முருகானந்தம் ஆகியோர் பாதிக்கப்பட்ட ராஜேஷ் கண்ணனின் தாயார் ராஜேஸ்வரி,சகோதரி ராதிகா, உறவினர்களை வீட்டிற்குச் சென்று நேரில் சந்தித்து முழு விபரங்களை கேட்ட றிந்தனர்.  

செவரக்கோட்டையில் பாதிக்கப்பட்ட ராஜேஷ் கண்ணாவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஏ  ஆறுமுகம் ,மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ .ஆர் .மோகன், தாலுகாக்குழு உறுப்பி னர் பி .எல். சக்திவேல் பட்டமங்கலம் கிளைச்  செயலாளர் பி. எல். மாணிக்கம் ,கோவிலூர்  ஆர்.வேணுகோபால் ஆகியோர் சந்தித்து நடந்த விபரங்களை கேட்டறிந்து,ஆறுதல் கூறினர்.