districts

img

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களை அரசியல் தலையீடு இன்றி வழங்கிடுக

பொள்ளாச்சி, டிச.20- பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களை அரசியல் தலையீடு இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொள் ளாச்சி சார் ஆட்சியரிடம்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் கோரிக்கை மனு அளித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட நந்தனார் காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததி யர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நக ராட்சிக்குட்பட்ட பொதுக்கழிப்பிடம் சுகாதாரமின்றி துர்நாற் றம் வீசி வருகிறது. மேலும் அடிக்கடி செப்டிக் டேங்க்  அடைப்பு ஏற்படுகிறது. மின்மோட்டார் அடிக்கடி பழுது ஏற்படுவதால் தண்ணீர் சரிவர வருவதில்லை. மேலும், கிட்டயசூராம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் குடியி ருப்புகளில் வீடுகள் இல்லாத தலித் மக்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களை அரசியல் தலையீடு இன்றி  நியாய விலைக் கடை ஊழியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஞானதேவ் சுபம் தாக்க ரேயிடம் மனு அளித்தனர். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா தலைவர் மணியாழன், தாலுகா துணைத் தலைவர் சுபாஷ் துரை, பொருளாளர் கௌதம் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

;