ஈரோடு, ஜன.12- முதல்வர், துணை முதல்வர் போட்டியிடுவதாக எண்ணி பெறு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்ய வேண்டும், என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட் டியிடும் திமுக வேட்பாளர் சந்திர குமார் வேண்டுகோள் விடுத்துள் ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி. ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட செயல்வீரர்கள் கூட்டம், ஈரோடு பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் ப.செல்வராஜ் தலைமை வகித்தார். திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சருமான சு.முத்துசாமி சிறப்புரை யாற்றினார். அப்போது பேசிய முத்துசாமி, சட்டமன்ற உறுப்பின ராக சந்திரகுமார் வந்தால் தோழமை கட்சியினர், அமைப்பு களையும் அனுசரித்து, அவர்களின் கருத்துகளையும் உள்வாங்கி அதற் குத் தீர்வு காண்பதற்கான நடவ டிக்கை எடுக்க வேண்டும். மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றார். அதற்கு முழு முதற்காரணம் இங்கு வந்திருக்கும் அத்தனை பேரும் என்பதை யாரா லும் மறக்க முடியாது. இந்த தேர்தலி லும் கடுமையாக உழைத்து மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண் டும். தேர்தலில் சட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நம் முடைய தோழமை கட்சிகள் மிகுந்த பொறுப்புள்ள கட்சிகள். எனவே விதிமீறல் எதுவும் இல்லாமல் நடக்க வேண்டும். நாம் என்ன செய் திருக்கிறோம், என்ன செய்யப் போகிறோம் என்பதை நடந்து சென்று வீடு வீடாக வாக்கு கேட்க வேண்டும். 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து, செய்தியா ளர்களிடம் பேசிய வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், தமிழ்நாடு முதலமைச் சரும், துணை முதலமைச்சரும் இங்கே போட்டியிடுவதாக எண்ணி மிகப்பெரிய வெற்றிக்கு அத்துணை பேரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறேன். இத்தேர்தலில் மிகப் பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை, எந்த ஒரு அரசியல் இயக்கமும் பெறாத வெற்றியை இந்த இடைத்தேர்தலில் பெற இருக்கிறோம். திமுகவின் வெற்றி எழுதி வைக்கப்பட்ட வெற்றி. இத் தேர்தலில் கதாநாயகனாக திமுக அரசின் கடந்த 4 ஆண்டு சாதனை கள் தான் மையப்புள்ளியாக இருக் கப் போகிறது, என்றார். இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்பு இணைச்செயலாளர் அன்பகம் கலை, ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் கே.துரைராஜ் மற்றும் கூட்டணி கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.