districts

img

மே 22 ஆம் தேதி முதல் ஏற்காடு கோடை விழா துவக்கம்

சேலம், மே 18- 47 ஆவது ஏற்காடு கோடை விழா  மற்றும் மலர் கண்காட்சி வரும் மே 22  முதல் மே 26 ஆம் தேதி வரை 5  நாட்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடர்பான முன் னேற்பாடு பணிகள் குறித்த அனைத் துத்துறை அரசு அலுவலர்களுட னான ஆலோசனைக் கூட்டம் ஆட்சி யர் ரா.பிருந்தாதேவி தலைமையில் ஆட்சியகரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆட்சியர் பிருந்தா தேவி பேசுகையில், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ் விக்கும் வகையில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்  கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, இந்த ஆண்டு 47 ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் மே 22 ஆம் தேதி துவங்கி மே 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள் ளது. இவ்விழாவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணி களைக் கவரும் வகையில் மலர் அலங்காரம் மற்றும் வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர் கண்காட்சி அமைத்திடவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஏற்காடு பகுதியைச் சுற்றியும் தூய் மைப் பணியினை மேற்கொள்ளவும், தடையற்ற குடிநீர் வசதி மற்றும் சுகா தார வசதிகளை மேற்கொள்ளவும், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு உண வுத் திருவிழா நடத்திடவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை யின் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக் குத் தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள், படகுப் போட்டிகளை நடத்திடவும், உள்ளாட்சித்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,  தேவைக்கேற்ப வாகன நிறுத்துமிடங் களை ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோன்று, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ஏற்காட்டிற்கு செல் லும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக் கான எச்சரிக்கை பலகைகளை தேவைக்கேற்ப கூடுதலாக அமைத் திடவும், இரவு நேரங்களிலும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலைத் தடுப்புகளில் வண்ணம் தீட் டுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. சிறப்பு பேருந்து வசதிகள், இலவச மருத்துவ முகாம்கள் மற் றும் நடமாடும் மருத்துவ முகாம் கள், போக்குவரத்து நெரில் ஏற்படா மல் இருக்க தேவையான நடவடிக் கைகள், பிளாஸ்டிக் பொருட்களின் பாதிப்பு குறித்து சுற்றுலாப் பயணி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளதால், பிளாஸ் டிக் அல்லாத ஏற்காடு கோடை  விழாவாகக் கொண்டாட நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவ லர் பெ.மேனகா, மாவட்ட வன அலு வலர் கஷ்யப் ஷஷாங் ரவி, வரு வாய் கோட்டாட்சியர் அம்பாயிரநா தன், தோட்டக்கலை துணை இயக்கு நர் ஜி.மாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;