வியாழன், ஜனவரி 21, 2021

districts

img

பணி ஓய்வு பாராட்டு விழா

ஓசூர், ஏப். 29-தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓசூர் பணிமனையில் நடத்துனராக 32 ஆண்டுகள் பணி புரிந்து இம் மாதம் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெரும் பி ராஜாவுக்கு சிஐடியு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.ஓசூரில் நடைபெற்ற இவ்விழாவில் தோழர் பி.ராஜாவின் பணிகளை பாராட்டி பேசிய அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் சிஐடியுவின் தருமபுரி மண்டலத் தலைவர் எஸ்.சண்முகம்,“ போக்கு வரத்துக் கழகத்தில் சேர்ந்த நாள் முதல் சங்கத்தின் கிளைச் செயலாளர் மண்டல இணைச் செயலாளர், சங்க நிர்வாகி என 32 ஆண்டுகளாக சிஐடியு சங்ககத்தை பலப்படுத்துவதற்கும் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்னின்றும், போராட் டங்களுக்கு தலைமை தாங்கியும் நடத்தி வந்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.பொதுச் செயலாளர் முரளி, பொருளாளர் முருகன், இணைச் செயலாளர் குணசேகரன், பிரபாகரன்,கிளை நிர்வாகிகள் தியாக ராஜன், சண்முகம், தனசேகரன், சுபாஷ் கலையரசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பீட்டர், தலைவர் சிறீதர், துணைத் தலைவர் வாசுதேவன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் சேதுமாதவன், நாராயண மூர்த்தி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன் மற்றும் போக்குவரத்துக் கழக, சிஐடியு மண்டல மாவட்ட நிர்வாகிகள், தொமுச , ஐஎன்டியுசி சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள், நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வாழ்த்திப் பேசினர்.

;