சென்னை, ஜூலை 14- எல்ஐசி முகவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் வலியு றுத்தி உள்ளது. எல்ஐசி முகவர்களை ஒன்றிய அரசு 2008 ஆம் ஆண்டு முறைசாரா தொழிலாளர்களாக அங்கிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் 2018 ல் கேரள இடது முன்னணி அரசு, எல்ஐசி முகவர்களுக்கு நலவாரியம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1.5 லட்சம் எல்ஐசி முகவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனை சந் தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) தென்மண்டல தலைவரும், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான ஏ.வி.பெல்லார்மின், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஏ.கலாம், தென்மண்டல செயல் தலைவர் எம்.செல்வராஜ், தென் மண்டல செயலாளர்கள் கே.தாமோதிரன், டி.கே.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.