உடுமலை, ஜன.20- படைப்புழு தாக்குதலால் விளைச்சல் இல்லாமல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். உடுமலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிர் செய்து உள்ள னர். ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரத்திற்கும் மேல் செலவான நிலை யில், தற்போது பயிர்களில் படைப்புழு தாக்குதலால் விளைச் சல் இல்லாமல் உள்ளது. கடந்த காலங்களில் வேளாண்மை துறையால் படைப்புழுகளை கட்டுப்படுத்த மருந்துகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது பருவம் தவறிய மழை மற்றும் தரம் இல்லாத விதைகளால் மக்காச்சோளம் விளைச்சல் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேளாண்துறைக்கு கோரிக்கை வைத்து உள்ளார்கள்.