திருப்பூர், ஜூலை 27- தாராபுரம் அருகே அப்பார்ட்மெண்ட் கழிவுநீரை நேரடி யாக குழி தோண்டி நிலத்திற்குள் விடுவதால், சுற்றுவட்டார ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் மாசு அடைந்துள்ளது என பொது மக்கள் மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் கூறியதாவது, தாராபுரம் சித்தராவுத்தன் பாளையம் கிராமம் சம்பத் நகரில் அப்பார்ட்மெண்ட் குடியி ருப்பு உள்ளது. இதில் தனியார் காற்றாலை நிறுவனத்தை சேர்ந்த வடமாநில ஊழியர்கள் உட்பட 70க்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இந்த அப்பார்ட்மெண்ட் கழிவு நீரை சாலையில் 10 அடிக்கு குழி தோண்டி அதில் நேரடியாக விடுகின்றனர். இதனால், இந்த அப்பார்ட்மெண்டை சுற்றி யுள்ள வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் முழுவ தும் மாசடைந்து உபயோகிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து அபார்ட்மெண்ட் உரிமையாளரிடம் தெரிவித்தால் சின்டெக்ஸ் தொட்டி வைத்து அதில் பிடித்து அப் புறப்படுத்துவதாக கூறினார். ஆனால் தற்போது சின்டெக்ஸ் டேங்கை மற்றும் வைத்துவிட்டு, அதில் கழிவுநீர் குழாயை இணைக்காமல் உள்ளார். இதனால் சுற்றியுள்ள வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உட்பட பல நோய்கள் உண்டாகும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.