தருமபுரி, மார்ச் 17- தருமபுரியை அடுத்த பொன்னே ரியில் கலப்பட டீசல் விற்பனையை தடுத்த அரசு அதிகாரிகள் மீது தாக் குதல் நடத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம், குண்டலப் பட்டி, மாட்லாம்பட்டி, பெரியாம் பட்டி, பொன்னேரி, அகரம் நெடுஞ் சாலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கலப்பட டீசல் விற் பனை மையங்கள் செயல்பட்டு வரு கிறது. தேசிய நெடுஞ்சாலையில் செலும் லாரி ஓட்டுநர்கள் மூலம், வாகனத்திலிருந்து டீசல் எடுக்கப் பட்டு அதில் ரசாயணங்கள் கலந்து, கலப்பட டீசலாக விற்பனை செய் யப்பட்டு வருகிறது. இம்மையங்க ளில் இரவு பகலாக நடந்து வரும் கலப்பட டீசல் விற்பனை குறித்து, பலர் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. தொடர் புக ரையடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சி யர் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், தாசில்தார்கள் சின்னா, ராஜராஜன், வினோதினி, பாலமுரளி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் புதனன்று மாலை கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை யில் உள்ள பொன்னேரி என்ற இடத் தில் உள்ள கலப்பட டீசல் விற்பனை மையத்தில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
அப்போது அங்கிருந்த கலப்பட டீசல் விற்பனை செய்து வரும் பெரியசாமி மற்றம் அவரது மனைவி, மகன்கள் அதிகாரிகளு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்யுள்ள னர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென கல், இரும்பு, கம்பிகளை கொண்டு அதிகாரி களை சரமாரியாக தாக்கினர். இத் தாக்குதலில் தாசில்தார் கோவிந்த ராஜ், புள்ளியியல் அலுவலர் ரோசா ரியோ, கிராம நிர்வாக அலுவலர் முருகன் உட்பட 4 பேர் படுகாயம டைந்தனர். மேலும், ரோசாரியோ வுக்கு முதுகில் பின்புறம் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து அதி காரிகள் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந் தனர். இதையறிந்த கலப்பட டீசல் விற்பனை கும்பல் அங்கிருந்து தப்பி விட்டனர். இதைத்தொடர்ந்து காவல் பாதுகாப்புடன், கலப்பட டீசல் விற்பனை மையங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரி கள், பேரல் பேரலாக கலப்பட டீசலை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கெரகோடஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் பீமன் அளித்த புகாரின் பேரில், காரிமங்க லம் காவல் துறையினர் 4 பேர் மீது வழக்கப்பதிவு செய்து, பெரிய சாமி, அவரது மனைவி கல்பனா, மகன் அன்பழகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலை மறைவான ஒரு மகனை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசு அதிகாரி கள் மீது தாக்குதல் நடத்திய சம்ப வம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.