districts

img

பண்டிகை கால முன் பணம் எங்கே?

உதகை, அக்.15- தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரு சில நாட்களே இருக் கும் நிலையில் இதுவரையில் தீபாவளி முன் பணம் வழங்காமல் உள்ள தோட்டக்கலைத்துறையை கண்டித்து உதகையில், பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவ ரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா உள்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இது தவிர  கோல்கிரைன், காட்டேரி, நஞ்ச நாடு உட்பட பல்வேறு பண்ணை களும் உள்ளன. இதில், 500-க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர்.  இவர்களில் பெரும்பாலா னவர்கள் நிரந்தரமாகவும், சிலர் தற்காலிக பணியாளர்களாக பணி யாற்றி வருகின்றனர். இவர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைளை வலியுறுத்தி  தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டு தோறும்  தீபாவளிக்கு முன் தொழிலாளர் களுக்கு ரூ.10 ஆயிரம் தீபாவளி முன்பணம் வழங்கப்படும்.

இதனை  மாதந்தோறும் ரூ.1000 வீதம்  ஊதியத்தில் பிடித்தம் செய்யப் படும். இந்த தொகை, தீபாவளிக்கு  முந்தைய மாதமோ அல்லது 20  நாட்களுக்கு முன்னரே தோட்டக் கலைத்துறை தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதனை பெறும் பூங்கா ஊழியர் கள் புத்தாடை, பட்டாசு போன்ற வற்றை வாங்குவார்கள்.  ஆனால், தற்போது தீபாவளி  பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள  நிலையில்,  இதுவரை பண்டிகைக் கான முன்பணத்தை ஊழியர் களுக்கு வழங்கப்படவில்லை. இதனையடுத்து, உடனடியாக தீபாவளி முன் பணத்தை வழங்க  வேண்டும் என ஊட்டியில் உள்ள  தாவரவியல் பூங்கா அலுவலக  நுழைவு வாயில் பகுதியில் ஊழியர் கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதேபோன்று நீலகிரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து பண்ணைகள் மற்றும் பூங்கா களில் சனியன்று தோட்டக்கலைத் துறை தொழிலாளர்கள் தீபாவளி முன்பணம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் போராட் டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத் தினர்.  அதில், வரும் செவ்வாய் கிழமை 18ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்று தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.