districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உதகை 19 வது ரோஜா கண்காட்சி நிறைவு

உதகை 19 வது ரோஜா கண்காட்சி நிறைவு உதகை, மே 20– உதகையில், 126 வது மலர் கண்காட்சி நிறைவு விழாவில்  முதல்வர் கோப்பை வெலிங்டன் டி.எஸ்.எஸ்.சி., க்கு வழங்கப் பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில்  10 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சி திங்களன்றுடன் நிறை வடைந்தது. இந்த நிறைவு விழாவையொட்டி அரசு தாவ ரவியல் பூங்காவில் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா  நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மு. அருணா  பங்கேற்று மலர் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல் வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுக்கு, 37 சுழற் கோப்பைகள், 135  முதல் பரிசு, 133 இண்டாம் பரிசு மற்றும் 80 சிறப்பு பரிசுகள்  வழங்கப்பட்டது. அதில் பெஸ்ட் புளூம் ஆப் தி ஷோ சுழற்  கோப்பை கன்னியாகுமரியை சேர்ந்த சசிக்குமாருக்கு வழங் கப்பட்டது. சிறந்த பூங்காவுக்கான பரிசு வெலிங்டன் டி.எஸ். எஸ்.சி., க்கு வழங்கப்பட்டது. முதல்வர் கோப்பை வெலிங்டன்  டி.எஸ்.எஸ்.சி., க்கும், கவர்னர் கோப்பை கன்னியாகுமரியை சேர்ந்த சசிக்குமாருக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று, சிறந்த ரோஜா தோட்டத்திற்கான கோப்பை அருவங்காடு கார்டைட் தொழிற்சாலைக்கு கிடைத்தது. இவ்விழாவில் தோட்டக்கலை துறை இணை இயக்கு னர் சிபிலா மேரி, உதவி ஆட்சியர் கவுசிக், தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கனமழையால் குட்டை உடைந்து வீடுகளில் புகுந்த மழைநீர்

கனமழையால் குட்டை உடைந்து வீடுகளில் புகுந்த மழைநீர் திருப்பூர், மே 20 - திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே, முட்டிக்காளான்பதி கிராமத்தில், குட்டை நிரம்பி மழை நீர் வெளியேறியதில் அப்ப குதியில் உள்ள வீடுகள் பாதிப்படைந்தன. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அரிசி, வேஷ்டி,  சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயி றன்று பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  இதில் திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே வடக்குப் பகுதி யில் உள்ள முட்டிக்காளான்பதி, பட்டம்பாளையம் உள்ளிட்ட  கிராமங்களில் கனமழை காரணமாக குட்டைகள் நிரம்பி  மழைநீர் வெளியேறியது. இதில் வீடுகள், விளைநிலங்க ளில் மழை வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் முட்டிக் காளான்பதி கிராமத்தில் குட்டை நிரம்பி மழை வெள்ளம் வெளி யேறியதில் பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு உடைந்தது. மேலும், மின்  கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தடை பட்டது. மழை வெள்ளம்  புகுந்த காரணத்தால் வீடுகளில் சமையலறை போன்ற பகுதிக ளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள்  உணவு இன்றி பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அங்கு  வந்த அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு  வழங்கினர். அதனை தொடர்ந்து வந்த வருவாய்த்துறை ஊழி யர்கள் பாதிப்படைந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும்,  அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நேற்று பெய்த மழை யால் குட்டை நிரம்பி மழை வெள்ளம் தங்களது வீடுகளுக் குள் புகுந்ததில் உடைமைகள் அனைத்தையும் இழந்துள் ளோம். தங்களது கிராமம் அடிப்படை வசதியின்றி மிகவும்  பாதிக்கப்பட்டுள்ளது. குட்டையை சரி செய்து வடிகால், சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என கேட்டுக்  கொண்டனர்.

சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைத்திடுக ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு 

தருமபுரி, மே 20- சுடுகாடு சுற்றுச்சுவர் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில், தனிநபரின் நிலத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரு வதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தருமபுரி ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி ஒன்றியம், வெள்ளோலைக் கிரா மத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக் கிராமத்தின் அருகே சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை வைத் தனர். அதனடிப்படையில் சுடுகாடு சுற்றுசுவர் அமைக்க ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், சுடுகாட்டுக்கு சுற்றுச் சுவர் அமைக்காமல் சுடுகாட்டுக்கு அருகே உள்ள தனிநபர் ஒருவரின் விவசாய நிலத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு  வருகிறது. எனவே, இதனை தடுத்து நிறுத்தி, சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

நிரந்தர தீர்வாக வடிகால் அமைக்க வேண்டும் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை

திருப்பூர், மே 20- திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிறன்று கனமழை பெய்தது. 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழை, திருப்பூர் வடக்கு பகுதிகளில் 60 மில்லி மீட்டர் அளவா கப் பதிவானது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. குறிப்பாக ஜெயலட்சுமி நகர் மற்றும் கருப்பராயன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுதும் இரவு நேரங்களில் மழை நீரை வெளியேற்ற முடியாமல் குழந்தைகளுடன் அவதிப் படுவதாகவும், தங்களுக்கு தற்காலிகமாக பள்ளிகளில் தங்க வைத்தல், உணவு வழங்குதல் போன்ற நிவாரண உதவிகளை செய்வதைக் காட்டிலும் நிரந்தரத் தீர்வாக வடிகால் வசதி அமைத்துத் தர வேண்டும். அது மட்டுமே எங்களுக்கு தேவை  என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரூப் 4 தேர்வு: 1.06 லட்சம் பேர் எழுதுகின்றனர்
குரூப் 4 தேர்வு: 1.06 லட்சம் பேர் எழுதுகின்றனர் சேலம், மே 20- சேலம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை 1.06 லட்சம் பேர்  எழுத உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார் பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4க்கான தேர்வு ஜூன் 9 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், குரூப் 4 தேர்வை சேலம் மாவட்டத்தில் உள்ள 270 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 361 தேர்வு கூடங்களில் 1,06,082 தேர்வர்கள் எழுதவுள்ளனர். இத்தேர்வினை கண்காணிக்கும் வகையில் 89 நடமாடும் கண் காணிப்புக்குழுவும், 20 பறக்கும் படையும் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். இத்தேர்வினை எழுத வருகை தரும் தேர்வர்கள்  தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு காலை 9  மணிக்கு முன்னதாகவே வருகை தரவேண்டும். தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு  பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது, என்றார்.

ஈரோட்டில் அதிமுகவினர் சேலை விநியோகம்

ஈரோடு, மே 20- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக் கும் நிலையில், ஈரோடு நாடாளுமன்ற தொகு தியில் அதிமுகவினர் சேலை விநியோகம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் அறி விக்கப்பட்டு 7 கட்டங்களாக நடைபெற்று வரு கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழகத் தில் முடிவடைந்துள்ளது. இருப்பினும், தேர் தல் நடத்தை விதிகள் தற்போது வரை அமலில் உள்ளது. இந்நிலையில், ஈரோடு நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஞாயிறன்று இரவு அதிமுக பெயரில் சேலைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எலந்தகுட்டை ஊராட் சிக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனத் தில் சேலைகள் அடங்கிய மூட்டையை எடுத் துச்சென்றனர். மற்றொருவர் செல்போனில் விபரங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டே சென்றார். மற்றுமொருவர் மது போதையில் ஒவ்வொரு வீடாகச் சென்று குடும்பத் தலை விகளின் பெயரைச் சொல்லி அழைத்து சேலை களை விநியோகம் செய்தார். என்ன, எதற் கென்று பெண்கள் கேட்ட போழுது, இது அதி முகவினரின் அன்பளிப்பு என்றும், ஆற்றல்  அசோக்குமாரின் சேலை தான் என்றும், பட்டுப் புடவை என்றும் சொல்லிக் கொடுத்துச் சென்றார். வாக்குப்பதிவிற்கு முன் பவானி பகுதி யில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்ட 161 பண்டல்களில் இருந்த 24 ஆயிரத்து 150 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலை யில், வாக்காளர்களுக்கு அதிமுகவினர் சேலை களை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

அவிநாசி அரசு பள்ளி சமையலர் பாப்பாள் வழக்கு விசாரணை 

அவிநாசி அரசு பள்ளி சமையலர் பாப்பாள் வழக்கு விசாரணை  திருப்பூர், மே 20- திருப்பூர் அருகே அரசு பள்ளி சமையலர் பாப்பாள் மீதான வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட வழக்கு விசாரணை திங்க ளன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், குட்ட கம் ஊராட்சிக்குட்பட்ட திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்த பட்டியலின பெண் பாப்பாள் மீது தீண்டாமை வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது. இதுகுறித்த வழக்கு, திருப் பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதி மன்றத்தில் நடை பெற்று வந்தது. கடந்த மாதம், பட்டியலின மற்றும் பட்டியல்  பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை விசாரிக்க சிறப்பு  நீதிமன்றம், திருப்பூர் நீதிமன்ற வாளகத்தில் தொடங்கப்பட் டது. இதைத் தொடர்ந்து, பாப்பாள் வழக்கு அந்த நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் மே 20 முதல் 23 வரை விசாரணை நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிபதி பத்மா முன்னிலையில் வழக்கின் முதல் நாள் விசாரணை திங்க ளன்று துவங்கி நடைபெற்றது.

ஏற்காடு கோடை விழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சேலம், மே 20- ஏற்காடு கோடை விழா, மலர் கண்காட்சி மே 22 ஆம் தேதி தொடங் குவதை முன்னிட்டு, சிறப்புப் பேருந் துகள் இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் மண்ட லம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், ஏற்காடு கோடை விழா மே 22 ஆம் தேதி முதல் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக் காக, தினசரி சேலத்தில் இருந்து ஏற் காட்டுக்கு இயக்கப்படும் 12 பேருந் துகளுடன் கூடுதலாக 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வச திக்காக ஏற்காட்டில் உள்ள முக்கிய  சுற்றுலாத் தலமான ஏற்காடு ஏரி, பகோடா காட்சி முனை, சேர்வராயன் கோயில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மூன்று உள் வட்ட சிறப்புப் பேருந்துகளும் இயக் கப்படவுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மே 22 ஆம் தேதி முதல் காலை 8.30 மணிக்கு  சேலம் புதிய பேருந்து நிலையத்திலி ருந்து (பேக்கேஜ்) சிறப்புப் பேருந்து புறப்படும். ஏற்காட்டில் உள்ள முக் கிய சுற்றுலாத் தலமான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக் கோடா காட்சி முனை, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய இடங் களைக் கண்டுகளிக்கலாம். இதன் பின் மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு மாலை 7 மணிக்கு நிறைவு செய்யும் வகையில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்துக்கு ஒரு பய ணிக்கு கட்டணமாக ரூ.300 வசூலிக் கப்படும். மேலும் பயணிகளின் வச திக்காக பேக்கேஜ் பயணத்துக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம், செயலி வழியாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;