districts

img

மலர் தொட்டி அடுக்கும் பணி துவக்கம்

உதகை, மே 4- உதகை அரசு தாவரவியல் பூங் ்காவில் வரும் 10 ஆம் தேதியன்று துவங்க உள்ள 126 ஆவது மலர் கண்காட்சிக்காக அலங்கார மேடை களில் மலர் தொட்டிகளை அடுக் கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சி யர் தொடங்கி வைத்தார். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் தற் போது கோடை சீசன் கலைக்கட்டி உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பய ணிகள் படை எடுத்து வந்த வண்ண மாக உள்ளனர். அவ்வாறு வரும் சுற் றுலாப் பயணிகள் கண்டு ரசிப்ப தற்காக பிரசித்தி பெற்ற அரசு தாவர வியல் பூங்காவில் வருகின்ற 10 ஆம்  தேதியன்று 126 ஆவது மலர் கண் காட்சி தொடங்குகிறது. இந்த மலர்  கண்காட்சி 11 நாட்கள் நடைபெ றும் நிலையில் அதற்கான பணிகள்  பூங்காவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் 126 ஆவது மலர் கண்காட்சியை காண வரும் சுற்று லாப் பயணிகளை கவரும் விதமாக  75 இனங்களில் 388 வகையான 35  ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக் கும் பணி சனியன்று நீலகிரி மாவட்ட  ஆட்சியர் மு.அருணா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இந்த ஆண்டு மலர் கண்காட்சி வழக் கத்தை விட முன்னதாகவே தொடங்க உள்ளதாகவும் அதன்படி  மே 10 ஆம் தேதியன்று  தொடங்கி  மே 20 ஆம் தேதி வரை நடைபெ றும். மலர் கண்கட்சி தொடங்கும் அதே மே 10 ஆம் தேதியன்று அரசு  ரோஜா பூங்காவில் ரோஜா கண் காட்சி தொடங்கி மே 19 ஆம் தேதி  நிறைவடையும். இதனை தொடர்ந்து மே 24 ஆம் தேதியன்று  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்க  கண்காட்சி தொடங்கி மே 26 ஆம்  தேதி நிறைவடையும். மேலும் இந்த  ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு  அம்சமாக பெரிய மலர் அலங்கா ரம் முதல் சிறிய மலர் அலங்காரம்  வரை அமைக்க திட்டமிடப்பட்டுள் ளதாகவும், 6.5 லட்சம் மலர்கள் இடம் பெற இருப்பதாகவும் அறுப தாயிரம் மலர் தொட்டிகள் அலங் கார மேடைகளில் வைக்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக தெரிவித் தார்.  இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள இ- பாஸ் நடைமுறை அமல்படுத்து வது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதி லளித்த ஆட்சியர், நீதிமன்ற உத்தர வுப்படி மே ஏழாம் தேதி முதல்  இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு அமல்படுத் துவது என்பது குறித்து சனியன்று மாலை அறிவிக்கப்படும். மேலும்,  குடிநீர் வழங்க தாவரவியல் பூங் காவில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மலர்  கண்காட்சியின் சிறப்பு அம்சமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் லேசர் ஒளி காட்சிகளை நடத்த  முதல்முறையாக திட்டமிடப்பட் டுள்ளது என்றார். இதனிடையே மலர் கண்கட்சிக் கான நுழைவு கட்டணம் 3 மடங்காக  உயர்த்தபட்டு பெரியவர்களுக்கு 150 ரூபாயும் சிறியவர்களுக்கு 75  ரூபாயும் கட்டணமாக பூங்கா நிர்வா கம் நிர்ணயம் செய்துள்ளது. அதே போல ரோஜா கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் இரண்டு மடங் காக உயர்த்தப்பட்டு பெரியோ ருக்கு 100 ரூபாயும் சிறியவர்க ளுக்கு 50 ரூபாயும் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை சீசன் தொடக்கமாக காய் கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி போன்றவைகள் நடத் தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள் ளதால் அவை இரண்டும் ரத்து  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
 

உதகையில் 25 சிறப்பு பேருந்துகள்

உதகையில் கோடை சீசன் துவங்குவதையொட்டி, வருகிற 7 ஆம்  தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ்  பெற்று செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இதனால் உதகைக்கு வரும் பலர் தங்களது சொந்த வாகனங் களை தவிர்த்து அரசு பேருந்துகளில் பயணிக்க வாய்ப்புள்ளது. மேலும்  பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத் தில் கொண்டு, கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து 25  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து உதகை மற்றும் கூடலூர் வரை 80 அரசு பேருந்து கள் செல்கிறது. தற்போது உதகையில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதி கமாக இருக்கும். இதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க் கும் விதமாக சனியன்று முதல் கோவையில் இருந்து கூடுதலாக 25  சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம். எனவே சுற்றுலாப் பயணி கள் கூட்ட நெரிசலை தவிர்த்து, அரசு பேருந்துகளில் பயணித்து  கோடைவிழாவை காண நீலகிரிக்கு செல்லலாம் என தெரிவித்த னர்.