சேலம், செப்.5- பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 5 ஆவது எடப் பாடி கோட்டப் பேரவை, ஓம லூர் கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத் தில், புதனன்று, சங்கத்தின் கோட்டத் தலை வர் மு.தங்கராசு தலைமையில் நடைபெற் றது. சங்கத்தின் மாநில துணைத்தலைவர் து. சிங்கராயன் துவக்கவுரையாற்றினார். கோட் டச் செயலாளர் தா.கலைவாணன் அந்தோணி, பொருளாளர் கா.மாரியப்பன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்திப்பேசினர். சங்கத் தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணி யன் நிறைவுரையாற்றினார். இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக் கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து தனியார் நிறுவனங்கள் வசூல் வேட்டை நடத்தி கொள்ளையடிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.