அன்னூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்
அன்னூர், அக்.17- அன்னூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதி களை ஏற்படுத்தி தரக்கோரி தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இம்மக்க ளின் பயன்பாட்டிற்காக அன்னூர் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், 24 மணி நேரமும் இன்று வரை பிரசவ சிகிச்சை பிரிவு செயல்படுவதில்லை. போதுமான மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். அன் னூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி களை ஏற்படுத்தித் தரக்கோரி தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளா னோர் பங்கேற்றனர்.
“வீட்டுமனை பட்டா கேட்டால் அடித்து விரட்டுவேன்” அதிமுக பிரமுகர் மிரட்டல்: ஆட்சியரிடம் மக்கள் புகார்
ஈரோடு, அக்.17- அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு இல வச வீட்டுமனை தரக்கோரினால் மிரட்டப்படு வதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் புகார் அளித்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத் திற்குட்பட்ட வள்ளிபுரத்தான்பாளையம் கிரா மத்தைச் சேர்ந்த மக்கள் அளித்துள்ள மனு வில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த 6 மாதங் களுக்கு முன்பே இலவச வீட்டுமனை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 50, 60 ஆண்டுகளாக நெசவு கூலி வேலை செய்து வருகிறோம். ஏழைய மக்களாகிய நாங்கள் வாடகை வீடுகளில் தங்கி வாழ்ந்து வருகிறோம். தற்போது வாடகை அதிகரித் துள்ள நிலையில் அதனை செலுத்த முடியா மல் கடனாளியாகி உள்ளனர். வாழ்க்கை நடத் துவதே மிக சிரமமாக உள்ளது. இந்நிலையில், வள்ளிபுரத்தான்பாளை யம் நத்தம் புறம்போக்கு நிலத்தை அதி முக பிரமுகர் கம்பிவேலி போட்டு ஆக்கிர மிப்பு செய்துள்ளார். அந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா கொடுங்கள் என்று கேட் டால் அவர் அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுக்கிறார். வீட்டு உரிமையாளர் களிடம் சொல்லி எங்களைக் காலி செய்யு மாறு மிரட்டுகிறார். எனவே அந்த நிலத்தை மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்: 49.08/60 அடி
நீர்வரத்து: 727 கனஅடி
வெளியேற்றம்: 107 கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 77.40/90 அடி.
நீர்வரத்து: 534 கனஅடி
வெளியேற்றம்: 255 கன அடி
மழையளவு:12 மிமி
பல்லகவுண்டன்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்க கிளை
திருப்பூர், அக். 17 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை பல்லகவுண்டன்பாளையத்தில் அமைக்கப்பட்டது. ஞாயிறன்று பல்லகவுண்டன்பாளையம் சிஐடியு அலுவ லகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிஐடியு இன்ஜினியரிங் சங்க நிர்வாகி காமராஜ் வரவேற்றார். ஊத்துக்குளி தாலுக்கா கமிட்டி மாற்றுத் திறனாளிகள் சங்க துணை கன்வீனர் பீ.சின்ன சாமி கிளை அமைப்பு அவசியம் பற்றி பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன் கலந்து கொண்டார். மாற் றுத்திறனாளிகள் 16 பேர் மற்றும் உதவியாளர்கள் என 32 பேர் உறுப்பினர்கள் சந்தா வழங்கினர். இக்கூட்டத்தில் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் புதிய கிளை தலைவராக வெள்ளிங்கிரி, செயலாளராக சுதர்சன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு மானியம்
திருப்பூர், அக். 17 - தாட்கோ திட்டம் மூலம் 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு விவசாய நிலம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம் பாட்டுக் கழகம் சார்பில் 2022-23 ஆம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க ரூ.10.கோடி மானியம் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த 4 நபர்களுக்கு ரூ.20 லட்சம் மானியமும், பழங்குயின பிரிவை சார்ந்த 1 நபருக்கு ரூ.5 லட்சம் மானியமும் மொத்தம் 5 நபர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உதவித்தொகை
திருப்பூர், அக்.17 - வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காத, படித்த மாற் றுத்திறனாளி இளைஞர்களுக்கு இதுவரை மூன்று மாதத் திற்கு ஒருமுறை உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்ப டும். பொதுமனுதாரர்களுக்கு காலாண்டிற்கு (மூன்று மாதம் ) ஒருமுறை வழங்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத வர்களுக்கு பொது ரூ.200, மாற்றுத்திறனாளிக்கு ரூ.600 வழங் கப்படும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது ரூ.300, மாற்றுத்தி றனாளி ரூ.600 வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான கல்வி தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது ரூ.400, மாற்றுத்திறனாளிக்கு ரூ.750 வழங்கப்படும். பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு பொது ரூ.600, மாற்றுத்திறனாளி ரூ.1000 வழங்கப்படும். வயது வரம்பு (உதவித் தொகை பெறும் நாளில்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள். இதர வகுப்பினர் 40 வயதிற்குள், மாற்றுத் திறனாளிகள் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. 45 வயதுக்கு மேல் சுய சான்று வழங்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங் கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்கவேண்டும். மனுதா ரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலை தூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண் ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து பொது மனுதாரர்கள் 5 வருடங்கள், மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று வேலையில்லாமல் காத்திருப்ப வர் www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்திலி ருந்தோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ இப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப் படும் அனைத்து போட்டித் தேர்விற்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வுமையங்க ளுக்கு சென்று வருவதற்காகவும் இத்தொகை வழங்கப்படு கிறது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வேலைவாயப்பற் றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் 2022 – 2023 இவ்வாண்டுக்கான சுயஉறுதி மொழி ஆவணத்தை 10 டிசம்பர் 2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றவர் கைது
தாராபுரம், அக். 17 - தாராபுரம் அலங்கியம் காவல்நிலைய எல்லைக்குட் பட்ட தளவாய்பட்டினம் காமராஜ் நகர் பகுதியில் உள்ள அன் வர்தின் என்பவரது மளிகை கடையில் குட்கா விற்பனை நடப்ப தாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேற்கொண்ட நடத்தப்பட்ட விசாரணையில் சேக் அலவுதீன் என்பவரது மகன் அன்வர்தீன்(60) குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வழக்குபதிவு செய்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம் சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், அக். 17 – தமிழக அரசு தன்னிச்சையாக 10 சதவிகித போனஸ் அறி விப்பு செய்ததைக் கண்டித்து காங்கேயம் அரசுப் பேருந்து பணிமனை முன்பாக அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத் தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திங்களன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்துக்கு கிளைத் தலைவர் கே.விஸ்வநாதன் தலைமை வகித்தார். மண்டல துணைத் தலைவர் என்.நடராஜ், பொதுக் குழு உறுப்பினர் டி.ராஜசேகர், காங்கேயம் கிளைச் செயலா ளர் எஸ்.அசோக்குமார் ஆகியோர் உரையாற்றினர். நிறை வாக திருப்பூர் மண்டல உதவிச் செயலாளர் ஆர்.வின்சென்ட் நன்றி கூறினார்.
விவேகானந்த சேவாலய குழந்தைகள் மரணம்: குற்றவாளிகளை தண்டிக்க கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பூர், அக். 17 – திருப்பூர் திருமுருகன் பூண்டி விவேகா னந்த சேவாலயத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் இதற்கு காரண மான குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தி தலித் விடுதலைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத் தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை காவல்துறையி னர் கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திங்களன்று நடைபெற்ற இப்போராட்டத்தில் கருணை இல்லங்கள் என்ற பெயரில் தனி யார் தொண்டு நிறுவனங்கள் நடத்துவதை தடை செய்வதுடன், அரசே இந்த விடுதிகளை ஏற்று நடத்த வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன. தலித் விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் செங்கோட்டையன் தலைமை யில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அடகு கடை உரிமையாளர் தலைமறைவு நகைகளை மீட்க கோரி பாதிக்கப்பட்டோர் மனு
திருப்பூர், அக். 17 – திருப்பூரில் அடகு கடை நடத்தி நகை களை எடுத்துக் கொண்டு தலைமறைவு ஆன வரை கண்டுபிடித்து நகைகளை மீட்டுத் தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் மனுக் கொடுத்து விட்டு கூறியதாவது: திருப்பூர் பாரியூர் அம் மன் நகர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி கோல்டு பைனான்ஸ் என்ற நகை அடகு கடை செயல் பட்டு வந்தது. இங்கு திருப்பூர் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் நிலை மைக்கு தகுந்தாற்போல் ஒன்றிரண்டு பவுன் முதல் ஏழெட்டு பவுன் வரை நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த அடகுக்கடை நடத்தி வந்தவர் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருப்பதாக வும், இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி மற்றும் பல்லடம் காவல் நிலையங்களில் புகார் அளித் தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறினர். எனவே மாவட்ட நிர்வா கம் உரிய முறையில் விசாரணை மேற் கொண்டு பாதிக்கப்பட்ட தங்களுக்கு நகை களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்ட னர்.
பட்டாசுக் கடை அமைக்க 132 பேர் விண்ணப்பம்
திருப்பூர், அக்.17 - திருப்பூர் மாவட்டதில் ஆன்லைமூலம் கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி வரையில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்ப ங்கள் பெறப்பட்டன. அதன் படி, திருப்பூா் மாவட்டத் தில் பல்லடம்-31, உடுமலை, அவிநாசியில் தலா-22, திருப் பூா் தெற்கு-14, தாராபுரம்-13, ஊத்துக்குளி-12, காங்க யம்-11, மடத்துக்குளம்-7 என மொத்தம் 132 போ் தற் காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனா்.
கோவை மருத்துவமனையில் பல்துறை ஆராய்ச்சிப்பிரிவு துவக்கம்
கோவை, அக்.17– கோவை அரசு மருத்துவமனை யில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேம்படுத்த பல்துறை ஆராய்ச்சிப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. கோவை மருத்துவக் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சிப் பிரிவு (எம்ஆர்யு) மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களிடையே மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளைத் துவங்க நிறுவப்பட்டுள்ளது. சைட்டோஜென டிக்ஸ் துறையை வலுப்படுத்த ஃப்ளோ ரசன்ஸ் இன் சிட்டு ஹைப்ரிடைசேஷன் (FISH) மற்றும் கேர்யோடைப்பிங் (Karyotyping) தொழில்நுட்ப வசதி களை கோயம்புத்தூர் மருத்துவக் கல் லூரியின் முதல்வர் ஏ.நிர்மலா, துணை முதல்வர் பி.சுஜாதா, நோடல் அதிகாரி பி.காளிதாஸ் (பேராசிரியர் & துறை தலைவர் - சமூக மருத்தும்), இதர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பயன்பாட்டுக்காக பல் துறை ஆராய்ச்சிப் பிரிவை திறந்து வைத்தனர். இதுகுறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் நிர்மலா கூறுகையில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குரோ மோசோமால் அசாதாரணங்கள் (கட்ட மைப்பு மற்றும் நடத்தை முரண்பாடு களை), மரபணு தொடர்பான மனநல குறைபாடு, மகப்பேறுக்கு முற்பட்ட நோயறிதல் மற்றும் பல்வேறு வகை யான புற்றுநோய்களை (ரத்த, மார் பக, கருப்பை, மூளை மற்றும் பிற புற்று நோய்கள்) கண்டறிய இந்த ஆராய்ச்சி உதவும். நேரடியாக ஃப்ளோரோஃபோர் களுடன் குறியிடப்பட்டு ரத்தத்தில் உள்ள புற்றுநோய் உயிரணு மற்றும் திசு மாதிரிகளில் டிஎன்ஏ அல்லது ஆர்என் ஏவை 1% க்கும் குறைவான பிழை விகி தத்துடன் அதிக உணர்திறன் மற்றும் தனித்தன்மையுடன் (48 மணிநேரத்தில்) கண்டறியும் விரைவான முறையாகும். இதன் மூலம் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் மற்றும் மரபணு கோளாறு சிகிச் சைக்கு வரும் கோவை மற்றும் அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் நீலகிரி மற்றும் பாலக்காடு நோயாளிகள் பயன்பெறு வர். கோவையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கோவை மருத் துவக் கல்லூரி மருத்துவமனைதான் முதன்மையாக இந்த வசதியைக் கொண்டுள்ளது என்றார்.
சிறுதானிய பயன்பாடு குறித்து கருத்தரங்கம்
தருமபுரி, அக்.17- உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் சிறுதானிய உணவு பயன் பாடு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் ஹமீதா பானு, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலு வலர் ஏ.பானு சுஜாதா, உணவு செறிவூட்டல் வள மையத் தின் தில்லி ஒருங்கிணைப்பா ளர் பி.ஜெகதிஸ்வரி, காரி மங்கலம் அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவர் ஏ. ஆர்.சுமதி, உணவு பாது காப்பு அலுவலர் நந்த கோபால் ஆகியோர் சிறு தானியங்கள் குறித்து உரை யாற்றினர்.