districts

img

பதவி உயர்வு வழங்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, மே 1- ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரி யர் கழகம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசி ரியர் கழகத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி அதிய மான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் பெ.துரைராஜ் தலைமை வகித்தார். நிர் வாகி சி.பெருமாள்சாமி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத் தில், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப் படி மற்றும் பதவி உயர்வு வழங்கிவிட்டு, ஆசிரியர்களுக்கான  மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலை வராக பெ.துரைராஜ், மாவட்ட செயலாளராக பழனிச்சாமி, மாவட்ட பொருளாளராக கருணாநிதி உள்ளிட்ட 14 மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், சங்கத்தின்  இணைச்செயலாளர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.