திருப்பூர், ஜூன் 19- கீழ்பவானி பாசன கால்வாயில் நடைபெ றும் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் தலைமைச் செயலா ளர் பிறப்பித்திருக்கும் வழிகாட்டுதலை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயி கள் வலியுறுத்தி உள்ளனர். கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் கள் சங்க பொருளாளர் எம்.வி.சண்முகராஜ், கீழ்பவானி பாசன பிரதான கால்வாய் பகுதி களில் தண்ணீர் திருட்டை தடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு செய்திருந்தார். குறிப்பாக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆயக்கட்டு பகுதிகளிலி ருந்து ஆயக்கட்டு அல்லாத பகுதிகளுக்கு சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சி பயன்ப டுத்தக் கூடாது. அதற்குரிய மின்சார இணைப் புகளை துண்டிக்க வேண்டும், சட்டவிரோத குழாய்களை கால்வாய் பகுதிகளில் அகற்ற வேண்டும், விவசாய பயன்பாடு அல்லாத கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு அக் டோபர் ஐந்தாம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதில் கீழ்ப வானி பாசன கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்த ஈரோடு கரூர் திருப் பூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியா ளர் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட் டிருந்தது. இதன் அடிப்படையில் மேற்கண்ட அதிகா ரிகளும் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு எடுக் கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை நீதிமன் றத்தில் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக கூட்டு கண்காணிப்பு குழு அமைத்து தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியிருந்தனர். இதன் அடிப்படையில் கீழ்ப வானி பிரதான கால்வாயிலும் அதன் பகிர் மான கால்வாய்களிலும் அனுமதி அற்ற வகை யில் எந்த வகையிலும் தண்ணீர் எடுக்கக் கூடாது. முறைகேடாக தண்ணீர் எடுக்கும் பம்பு செட்டுகளை கண்டறிந்து முற்றிலும் அகற்ற வேண்டும். பிரதான கால்வாயில் இருந்து 50 மீட்டருக்குள் திறந்த வெளி கிணறு களுக்கு, ஆழ்துளை கிணறுகளுக்கும், பகிர் மான கால்வாயில் இருந்து 25 மீட்டருக்குள் திறந்த வெளி கிணறுகளுக்கு, ஆழ்ந்த கிணறு களுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும். இப்பகுதியில் முறையற்ற வகை யில் நீரேற்றம் செய்வோர் மீது சட்ட நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பகுதி யில் இருந்து லாரிகள் மூலம் அல்லது இதர வாகனங்கள் மூலம் நீர் ஏற்றம் செய்வோம் நீர் கடத்துவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆயக்கட்டு பகுதி யில் சிறிய அளவு நிலத்தை கிரயம் செய்து பெற்று திறந்த வெளி கிணறுகள் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நூதனமான முறையில் வணிக பயன்பாட்டிற்கு அல்லது தொழிற் சாலை பயன்பாட்டிற்கு அல்லது குளிர்பான நிறுவனங்களுக்கு முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும். கால்வாயின் பக்கவாட்டு கரையிலிருந்து குறுக்கே துளையிட்டு நீர் எடுப்பதை தடுக்க வேண்டும். இந்த அடிப்ப டையில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின் பற்றாத, தவறு செய்யக் கூடியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கூடுதல் தலைமைச் செயலா ளர் சந்திப் சக்சேனா ஆணை பிறப்பித்துள் ளார். அவரது ஆணையின் அடிப்படையில் தண்ணீர் திருட்டு கடத்தலை தடுப்பதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்பவானி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.