கோவை, டிச.4- வேளாண் பல்கலைக்கழக கல்லூரி களின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பெரும் குளருபடிகள் நடைபெற்றுள்ளதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரி களில் பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதற் கான தேர்வு முடிவுகள் வெள்ளியன்று வெளி யாகின. ஆனால், இதில் தேர்வெழுதி யவர்களில் பெரும்பான்மையானோர் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. இதேபோல், தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் பலரை தேர்வெழுத வில்லை என கூறிப்பிட்டு ஆப்சென்ட் போடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளில் பல் வேறு குளருபடிகள் இருப்பதாக கூறி சனி யன்று கோவையிலுள்ள வேளாண் பல் கலைக்கழகத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் காவல்துறையினர் மற் றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும், இதில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், மாணவர்கள் தங்களது அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து வருகின்ற னர்.