districts

முதல்வர் கோப்பை மாநிலப் போட்டியில் உடுமலை மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை

உடுமலை, ஜூலை 6- மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், பகத்சிங் சிலம்பம் மார்சியல் ஆர்ட்ஸ்  அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற மாற் றுத்திறனாளி மாணவர் வெண்கல பதக் கம் வென்று சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா வடுகபாளையத்தை சேர்ந்த சுப் பிரமணி, கவிதா மணி தம்பதியின் இரண் டாவது மகன் சபரிநாதன்(17). தனியார்  பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரு கிறார். பிறவியிலேயே இடது கையில் முழங்கைக்கு கீழ் உரிய வளர்ச்சி இல் லாத சபரிநாதன் சிலம்பம், சுருள்வாள் வீச்சில் வல்லவராக திகழ்கிறார். ஒற்றை  கையில் சூறாவளியாக சிலம்பம் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவர் மாவட்ட அலுவலக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் ஒற்றை சுருள்வாள் போட் டியில் பங்கேற்று முதல் இடம் பிடித்து,  மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வரும் ஒற்றைச் சுருள் வாள்  போட்டியில் துணிச்சலுடன் பொது பிரி வில் களமிறங்கிய சபரிநாதன் வெங்கல  பதக்கம் வென்று சாதித்துள்ளார். பதக் கம் வென்று திரும்பிய சபரிநாதன் திருப் பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து சபரிநாதன் கூறுகை யில், எனது தந்தை விவசாயி. தான் மடத் துக்குளத்தைச் சேர்ந்த பகத்சிங் சிலம் பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட் டளை ஆசான் வீரமணியிடம்   சிறு வயது  முதலே சிலம்பம் மற்றும் சுருள்வாள் கற்று வருகிறேன். முதல்வர் கோப்பைக் கான மாநிலப் போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் பெற்றிருப்பது பெரு மையாக கருதுகிறேன். நன்றாக படித்து  ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே எனது  லட்சியம் என கூறினார். சபரிநாதனுக்கு  உடுமலை பகத்சிங்  சிலம்பம் மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட் டளை ஆசான் வீரமணி மற்றும் பயிற்சி யாளர்கள், பயிற்சி மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

;