districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு எஸ்டிபிஐ நிர்வாகிகள் இருவர் கைது

கோவை, செப்.25- கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதுதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த  செப்.23 ஆம் தேதியன்று குனியமுத்தூர் பகுதியில் இந்து முன்னணி பொறுப்பாளரான ரகு என்பவரது வீட்டின் முன்  நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் எரிபொருள் ஊற்றி பற்ற  வைக்கப்பட்டது. அதேபோல, அதே நாள் குனியமுத்தூர் பகு தியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு வழக்குப்பதிவு செய்யப் பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒவ் வொரு வழக்கிலும் தலா மூன்று தனிப்படைகள் அமைக்கப் பட்டு நுண்ணறிவு சேகரித்தும், கண்காணிப்பு கேமரா ஆய் வின் மூலம் புலன் விசாரணை செய்தோம். இதில், ஞாயி றன்று மாலை 4.30 மணியளவில் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். அதில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ் (34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ் (34) ஆகியோர் ஆவர். மேலும், இவர்கள் இருவரும் எஸ்டிபிஐ நிர்வாகிகளாக உள்ள னர் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

உதகை மார்க்கெட் கடைகளை உடைத்து பணம் கொள்ளை

உதகை, செப்.25- நீலகிரி மாவட்டம், உதகை மார்க்கெட்டில் ஆயிரத்து 500  கடைகள் உள்ளன. இந்நிலையில், சனியன்று இரவு மார்க் கெட்டில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் 18 கடை களின் பூட்டை உடைத்து, பல லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்களை திருடி  சென்றுள்ளனர். வழக்கம் போல் ஞாயி றன்று காலை கடைகளை திறக்க வந்த வியாபாரிகள் கடை  உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து, காவல் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதகை பி1 காவல் ஆய்வாளர் மணிகுமார் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள பொருத் தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மார்க்கெட் டில் காவல் நிலையம் அமைந்துள்ள போதிலும் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில்  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் பலி

கோவை, செப்.24- உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ராம்பால் (27), அன்னூரில் தங்கி பெயிண்ட ராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், ராம்பால் அன் னூரில் உள்ள தனியார் பள்ளி யில், 15 அடி உயரத்தில் நின்று பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார். அப் போது அவர் திடீரென எதிர் பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சிடைந்த அக்கம் பக் கத்தினர் அவரை மீட்டு கோவை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரி ழந்தார்.

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது ஏன்? ஓய்வுபெற்ற பிஏபி பொறியாளர் விளக்கம்

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர்  வீணாக வெளியேறிக் கொண்டிருக்கி றது. இதுகுறித்து ஓய்வுபெற்ற பிஏபி கண்காணிப்பு பொறியாளர் இளங்கோ வன் கூறுகையில், பரம்பிக்குளம் அணை யின் மதகிற்கு மேல் உள்ள கான்கிரீட் பிளாக் சேதமடைந்ததால், இரும்பு மதகு சேதமடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் கேரளா வில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கேரள  ஊடகங்கள் கூறி வருகின்றன. கடந்த ஓராண்டாக வெள்ள மேலாண்மை பணி களை கண்காணிக்க சுழற்சி முறையில் என்ஜினீயர்கள் பணிபுரிந்ததால், மதகு  உடைப்பு உடனடியாக தெரிந்தது. கண் காணிப்பில் இருந்தபோது தெரிந்ததால் தகவல் உடனே தெரிவிக்கப்பட்டது. கேரளாவிற்கும் வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது. அதேநேரத்தில் நடப்பாண்டில் நமக்கு பயன்பட இருந்த 6 டிஎம்சி தண் ணீர் வீணாக வெளியேறுவது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்று. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி அணை மதகு உடைந்தது. 4 ஆண்டுக ளுக்கு முன்பு முக்கொம்பு கதவணை பாதிக்கப்பட்டது. தற்போது பரம்பிக் குளம் அணையின் மதகு சேதம் அடைந் துள்ளது. இயற்கையின் பாதிப்புகள் என கூறினாலும், வேறு சில துறை ரீதியான காரணங்களும் இருக்கிறது என நான்  கருதுகிறேன்.‌ அணைகளின் மதகு களை இயக்கவும், பராமரிக்கவும் பாசன உதவியாளர்கள் இருப்பார்கள். பல் வேறு காரணங்களால் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. புதி தாக ஆட்களை எடுத்தாலும் முறை யான பயிற்சி இல்லை. கோவை மண்டலத்தில் 20க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த  அணைகளின் மதகுகள் மற்றும் மணற் போக்கி கதவுகளில் ஏற்படும் சிறிய, சிறிய பழுதுகள், ரப்பர்சீலிங் கிரீஸ், சில பெரிய பழுதுகளையும் பார்க்க அர சுத்துறையின் பணிமனை ஆழியாறில் இருந்தது. அங்கு பயிற்சி பெற்ற பணி யாளர்கள், அவ்வப்போது பழுதுகளை நீக்குவார்கள். ஆழியார் பணிம னையை சீரமைக்க வேண்டும் என ரூ.90 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்து அனுப்பினோம்.‌ அது தேவை இல்லை என உயர் மட்டத்தில் முடிவு எடுத்தனர். எந்த பழுதானாலும் ஒப்பந்ததாரரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. பெரிய ஒப்பந்தம் இல்லாமல் அவர்கள் பணி செய்யமாட்டார்கள். அவசரம் என அழைத்தால் உடனடி யாக வந்து சரிசெய்வதற்கான வாய்ப்பு கள் குறைவு. அதற்குள் பழுது அதிக மாகிவிடும்.

எனவே, 10 முதல் 13 ஆண்டு களுக்கு முன்பு ஆழியாரில் இருந்த பணி மனையை மீண்டும் செயல்படுத்த வேண் டும். ஐடிஐ படித்த இளைஞர்களை பணிமனையில் எடுத்து, 6 மாத பயிற்சி கொடுத்து தயார் செய்ய வேண்டும். அணைகள் பாதுகாப்பிற்கு உலக  வங்கி திட்டம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, அணைகளில் உள்ள  பணியாளர்களை அதிகப்படுத்த வேண் டும். முறையான பயிற்சியும், தமிழில் வழிகாட்டும் கையேடுகளையும் தர வேண்டும் என வலியுறுத்தினேன். அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மலைகளில் உள்ள அணைகளை பரா மரிக்க போதிய உதவி பொறியாளர் கள், அவர்களுக்கான பாசன உதவியா ளர்களை நியமிக்க வேண்டும். ஷிப்ட்  முறையில் பாசன பணியாளர்கள் பணி புரிய வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அவசியம். இது போன்ற அடிப்படையிலான பல முக்கிய அம்சங்களை செய்யாததால், தற்போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதை வைத்து கேரளா அணைகளை எங்களுக்கு தாருங்கள் என சாதகமாக பேசக்கூடும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலத்திற்கு நீர் வரும். இந்த மண்டலத்து விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்காது. ஒரு இடத்தில் மதகுகள் உடையும் போதே அனைத் தையும் சீரமைக்க வேண்டும். உடைந்த தற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் சரியான மேலாண் மையினால் மாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார். (ந.நி)


டாஸ்மாக் பாரில் தகராறு: 3 பேர் கைது

தாராபுரம், செப்.25- தாராபுரம், பாலசுப்பிர மணியபுரம் நகரில் டாஸ்மாக்  கடையில் மது அருந்த அலா வுதீன் (31), வழக்கறிஞர் ரங்க நாதன் (34), பெயிண்டர் லட்சுமணன் (36) ஆகியோர்  சென்றனர். மது அருந்திய பின் டாஸ்மாக் பார் ஊழியரி களிடம் தகறாறில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. இத்தக வலறிந்த வந்த போலீசார் மீது  போதையில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதில்  வினோத்குமார் என்ற காவ லர் காயம் அடைந்தார்.  இதைத்தொடர்ந்து காவ லரை தாக்கியதாக  அலா வுதீன், ரங்கநாதன் மற்றும் லட்சுமணன் ஆகிய 3 பேர்  மீதும் வழக்கு பதிவு செய்து   தாராபுரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத் தனர்.

உடுமலை நாராயண கவி பிறந்தநாள்  தமிழக அமைச்சர்கள் மரியாதை

உடுமலை, செப்.25- உடுமலை நாராயண கவிக்கு ஞாயிறன்று  பிறந்த நாளாயொட்டி (செப்.25)அரசு சார்பில்  அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை  செலுத்தப்பட்டது.  திருப்பூர் மாவட்டம்,உடுமலைப்பேட்டை வட்டம், பூளவாடி கிராமத்தில் கிருஷ்ண சாமி செட்டியார் முத்தம்மாள் தம்பதி யினருக்கு 25.09.1899 ஆம் ஆண்டு நாராயண கவி மகனாக பிறந்தார். பொதுவுடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுய மரியாதை போன்ற முற்போற்கு சிந்தனை களை பெரியாரிடம் கற்றறிந்தார். விடுதலை போராட்டத்தின் போது, தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை  தோறும் முழங்கியவர் ஆவார். 75 திரைப் படங்களுக்கு மேல் பாடல்களை எழுதி யுள்ளார். உடுமலை நாரயணகவி  பகுத்தறிவுக் கவிஞர் ஆவார். இவரது பாடல்களின் சிறப்பை பாராட்டி  22.04.1967 ஆம் ஆண்டு சங்கீத நாடக சங் கத்தின் சார்பில் “சாகித்யா ரத்னா விருது” வழங்கப் பட்டது. அதே ஆண்டில் தமிழ்நாடு  அரசு இயல், இசை, நாடகமன்றம் சார்பில்   “கலைமாமணி” விருது வழங்கி சிறப் பித்தது. உடுமலைப்பேட்டை குட்டைதிடல் அருகில் அமைந்துள்ள் உடுமலை நாராயண கவி அவர்களின்  திருவுருவச் சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும ஆதிதிராவிடர் நலத்துறை  அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்   ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி  மரியாதை செலுத்தினார்கள்.  இவ்விழாவில்,உடுமலைப்பேட்டை வரு வாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலைப்பேட்டை வாட்டாட்சியர்.கண்ணாமணி,  திருப்பூர் மாநகராட்சி 4ஆம்  மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான பொது  மக்கள் கலந்து கொண்டனர்.

சுப்பிரமணியனின் பணி நிறைவு ஆணையை அனுமதிக்கோரி ரத்த கையெழுத்து இயக்கம்

தருமபுரி, செப்.24- முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியனின் பணி நிறைவு ஆணையை அனுமதித்து, பணபலன்களை வழங் கக்கோரி செப்.30ல் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது என சிஐடியு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆர்.டி நகரில் உள்ள  சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சதீஸ்குமார் தலை மையில் நடைபெற்றது. இதில், மாநில துணைத்தலைவர் ஆர். ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சங்கர், வட்டார வளர்ச்சி அலு வலர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் விமலன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியனின் பணி நிறைவு ஆணையை அனுமதித்து, பணபலன்களை உடனடியாக வழங்கக்கோரி செப்.29 ஆம் தேதியன்று தருமபுரி மாவட் டத்தில் அனைத்து பிடிஒ அலுவலகம் முன்பும் பிரச்சாரம் நடத்துவது எனவும், செப்.30 ஆம் தேதியன்று ரத்த கையெ ழுத்து இயக்கம் நடத்தி துறை இயக்குநர், துறை செயலாளர், துறை அமைச்சர் ஆகியோருக்கு தபால் அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், பணி மேற்பார்வையாளருக்கு விருப்ப பணிமாறு தல் வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதிவரை எழுத்தர் ஊராட்சி செயலாளர்களுக்கு இள நிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலி யாக உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;