உதகை, ஜன. 18- ஓட்டுநர்களின் வாழ்க்கையை பறிக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்திருத்ததை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசை கண் டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஒன்றிய அரசு கொண்டு வந் துள்ள புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவின்படி விபத்து ஏற்படுத்தி விட்டு தகவல் சொல்லா மல் செல்லும் ஓட்டுநர்களுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்ப டும் என முன்மொழியப்பட்டுள்ளது. மோட்டார் வாகனத்தில் நடை பெறும் விபத்துகள் திட்டமிட்டு, வேண்டுமென்றே நடைபெறும் விபத்துகள் அல்ல. பெரும்பாலான விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் சில நொடிகளில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதென்பது உண்மை என்றா லும், விபத்துக்கான காரண காரி யங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதும், சரியான சாலை கட்டமைப்பு வசதி, நெடுஞ்சாலை களில் வாகன ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறை, சாலை பிரிகிற இடங்க ளில் போக்குவரத்து கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என சிஐடியு சாலை போக் குவரத்த்து சங்கம் உள்ளிட்ட சங் கங்கள் தொடர்ந்து ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது. ஆனால், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத ஒன்றிய மோடி அரசு, தானடித்த மூப்பாக சட்டம் போட்டு கட்டுப்படுத்தலாம் என அறிவீலித்தனமான பல முடிவுக ளால் பல பகுதி துறைகளில் கொந்த ளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து கடந்த சில வாரங்க ளுக்கு முன்பாக ராஜஸ்தான் உள் ளிட்ட வடமாநிலங்களில் கடும் போராட்டம் வெடித்தது. மாநிலங் களே ஸ்தம்பிக்கும் போராட்டங் களை லாரி ஓட்டுநர்கள் முன்னெ டுத்தனர். இப்போதைக்கு அவர் களை அந்த அரசுகள் சமாதானப்ப டுத்தி வைத்துள்ளனர். ஆனாலும், இந்த பிரச்சனை நீரில் பூத்த நெருப் பாக அவ்வப்போது வெடித்துக் கொண்டே இருக்கிறது.
இதன்தொடர்ச்சியாக, இச்சட்ட திருத்தத்தை கண்டித்து, கையொ ழுத்து இல்லாத இணையதள வழக்கை எதிர்த்தும் உதகையில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநி லங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை லாரி உரிமையாளர் கள் சங்கத்தினர் அறிவித்துள்ள னர். இதன்படி நீலகிரி மாவட்டத் திலும் வியாழனன்று லாரி உரிமை யாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. இதன்படி ஊட்டி, குன்னூர், கூட லூர், எல்லிநல்லி, பாலாடா, கோத் தகிரி, மஞ்சூர் உள்பட பல பகுதி களில் முறையாக லாரிகள் இயக் கப்படவில்லை. இதுகுறித்து லாரி உரிமையா ளர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்ப தாவது, தமிழகம் மற்றும் 17 மாநிலங் களில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் லாரி ஓட்டுநர்க ளுக்கு வழங்கப்படும் சிறை தண் டனை உள்ளிட்ட விஷயங்களை கண்டித்து வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஏற்கனவே முன்பணம் வாங்கப்பட்டு உள்ளதால் லாரியை ஓட்ட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர். மேலும் லாரி இயக்காவிட்டால் மிரட்டல் விடுகின் றனர். எனவே, இந்த போராட்டத் தின் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்வதற்கும், விழிப்புணர்வு ஏற்ப டுத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்த லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தம் கார ணமாக, குன்னூரில் இருந்து வாரத் துக்கு ரூ17 கோடி மதிப்பில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. லாரி கள் ஓடாத காரணத்தினால் பல் வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்ல இருந்த தேயிலை குடோன் களில் தேங்கியுள்ளது. ஒரு நாளில் மட்டும் சுமார் நான்கு கோடி ரூபாய் அளவில் தேயிலை தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.