districts

img

பிடிஎம்சி மூலம் சிகிச்சை - அரசு மருத்துவமனை சாதனை

 கோவை, மார்ச். 23- கோவை அரசு மருத்துவமனையில், கடுமையான இருதய நோயால் பாதிக் கப்பட்ட இருவருக்கு நவீன தொழிற்நுட் பத்தை பயன்படுத்தி சிகிச்சை அளித்து கோவை அரசு மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.  கோவை அரசு மருத்துவமனையின்  இருதயவியல் துறையில், கடுமையான  மிட்ரல் ஸ்டெனோசிஸ் (MITRAL STENO SIS) நோயால் பாதிக்கப்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, பெர்குடேனியஸ் டிரான்ஸ்வீனஸ் மிட் ரல் கமிசரோடோமியின் (PTMC) மூலம்  நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி அரசு மருத்துமனை மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.  இதுகுறித்து கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்  நிர்மலா கூறுகையில், இந்த செயல் முறை சமீபத்திய டிரான்ஸ்கேதீட்டர் (TRANSCATHETER) நுட்பத்தால் செய் யப்பட்டது. இதில், ஸ்டெனோசிஸ் (STE NOSIS) ஆன மிட்ரல் வால்வில் பலூன்  விரிவாக்கம் (BALLOON DILATATION) முறையை பயன்படுத்தி வால்வில்  ஏற்பட்ட சுருக்கம் சரிசெய்யபட்டது. நம்  நாட்டில் மிட்ரல் ஸ்டெனோசிஸுக்கு (MITRAL STENOSIS) மிகவும் பொது வான காரணியாகக் கருதப்படும் ருமாட் டிக் இதய நோயானது (RHEUMATIC HEART DISEASE) பெண்களையே அதி கம் பாதிக்கிறது. மேலும், அவை கர்ப்ப  காலத்தில் நிர்வகிக்க கடினமாகவும் சவாலாகவும் உள்ளது. இந்த சிகிச் சையை நமது அரசு மருத்துவக் கல்லூரி  இருதய மருத்துவர்கள் சிறப்பாக செய்து காட்டினர். 15 வருடங்களுக்கு முன், ஒரு நோயாளிக்கு இதுபோன்ற குறைபாடுகள் இருந்தால், அந்த குறை பாட்டை சரிசெய்ய திறந்த இதய அறுவை சிகிச்சை (OPEN HEART SURG ERY) செய்திருக்க வேண்டும். இதற்கு  குறைந்தது இரண்டு வாரங்களாவது  மருத்துவமனையில் தங்கியிருந்தி ருக்க வேண்டும்.  ஆனால், இப்போது  பலூன் விரிவடையும் நுட்பங்கள் வடிகு ழாய்மயமாக்கலைப் பயன்படுத்தி, 45 நிமிடங்களுக்குள் இந்த சிகிச்சையை நம்மால் அளிக்க முடிந்துள்ளது.  நோய்வாய்ப்பட்ட இவர்களை, இரு தயவியல் மருத்துவர்கள் குழு இந்த PTMC செயல் விளக்க முறையை மேற் கொள்ள குறைந்தது இரண்டு வாரங்க ளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டிருந் தது.  நோயாளிகள் முழுமையாக பரி சோதனை செய்யப்பட்டு செயல்மு றைக்குத் தயார்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளிகள் இருவ ருக்குமே முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே சம யம் தனியார் மருத்துவமனைகளில் இந்த PTMC சிகிச்சைக்கு சென்றி ருந்தால், ரூ.2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகியிக்கும் என்றார்.