districts

img

புலிகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி

உடுமலை, மே 29- இந்திய புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக கோடைக்கால கணக்கெடுப்பு பயிற்சியானது, தேசிய புலிகள்  பாதுகாப்பு அமைப்பு (என்டிசிஎ) ன் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் வனக்கோட்டத்தில் மே 29 ஆம் தேதி முதல் ஜூன் 5  ஆம் தேதி வரை 8 நாட்கள் கோடைக்கால புலிகள், இதர மாமிச  மற்றும் தாவர உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள்  நடைபெறுகின்றது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர்  வனக்கோட்டத்தில் உடுமலைப்பேட்டை, அமராவதி, கொழு மம் மற்றும் வந்தரவு ஆகிய வனச்சரகங்களிலுள்ள 34 சுற்றுக ளில் இப்பணியானது நடைபெறுகின்றது. இச்சுற்றுகளில் 53  நேர்கோட்டுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.    இப்பணியில் வனப்பணியாளர்கள் கலந்துகொண்டு கீழ்க் கண்ட அட்டவணைப்படி 3 நாட்கள் (30 மே முதல் ஜூன் 1 வரை)  சுற்றுகளிலுள்ள பகுதிகளில் காணப்படும் மாமிச உண்ணிகள்  மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடய கணக்கெடுப் பையும் அடுத்த 3 நாட்கள் (ஜூன் 2 முதல் 4 வரை) நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் இரை  விலங்குகளையும் (தாவர உண்ணிகள்), அதே பாதையில்  திரும்பி வரும்பொழுது ஒவ்வொரு 400 மீட்டர் இடைவெளி யில் உள்ள பிளாட்களில் தாவர வகைகளையும் கணக்கெடுக் கப்படுகிறது. மே 29 ஆம் தேதியன்று கோடைக்கால புலிகள் கணக்கெடுப்புகள் குறித்து வனப்பணியாளர்களுக்கு ஆனை மலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் தேவேந்திர குமார் மீனா தலைமையில் உயிரியலாளர் க.மகேஷ்குமார்  ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் அலுவல கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு, புலிகள் கணக்கெடுப்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வனப்பணியா ளர்களுக்கு வழங்கப்பட்டது.