districts

img

முடங்கிய படகு சவாரி : ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்

உடுமலை, டிச.2-  திருமூர்த்தி அணையில் பல வரு டங்களாக படகு சவாரி இயக்கப் படாமல் இருப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பும் நிலையுள்ளது.  உடுமலையில் இருந்து சுமார்  இருபது கிலோ மீட்டர் தொலையில் உள்ள திருமூர்த்தி மலைக்கு அதிக  அளவில் சுற்றலா பயணிகள் வரு வது வழக்கம். மேலும், திருமூர்த்தி மலையின் மேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சலிங்க அருவி மற்றும் மலையின் அடிவார  பகுதியில்  அமைந்துள்ள அமண லிங்கேஸ்வரர் கோவிலும், அங்கு இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலை யில் உள்ள அணையின் கரை பகுதி யில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் என அனைவரையும் கவரும் வகையில் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.  இந்நிலையில், அணை பகுதி யில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தனி பேரூராட்சி நிர்வா கத்தால் 1980 ஆம் ஆண்டு படகு  சவாரி துவக்கப்பட்டது. பின்னர்  2002 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக் கள் படகு சவாரியை சிறப்பாக இயக்க பெரிய படகு 3ம், சிறிய படகு 2ம் வழங்கியது. மேலும், இந்த படகு சவாரியின் மூலம் கிடைக்கும் வரு வாயில் 25 சதவிகிதம் பேரூராட்சி நிர் வாகத்திற்கும், 75 சதவிகிதம் மகளிர்  சுய உதவிக்குழுவிற்கு என பகிர்ந்து கொள்ளப்படும் என்ற நிபந்தனை யின்படி மிகவும் சிறப்பாக நடை பெற்று வந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேல் படகு சவாரி  நடைபெறாமல் உள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்களி டம் கேட்டபோது, அதிகமான சுற் றுலா பயணிகளை கவர்ந்த படகு  சவாரி  நிறுத்தப்பட்டு, தற்பொழுது பழுதடைந்த படகுகள் மட்டும்  காட்சி பொருளாக உள்ளது. இதை  சீர் செய்ய பேரூராட்சி நிர்வாகம் எவ்விதி நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும், சில தனியார் படகு  சவாரி திட்டத்தை தொடங்க உள்ள தாக கூறப்படுகிறது. இதை அனும திக்காமல் அரசு சார்பில் மட்டும் படகு சவாரி திட்டம் தொடங்க வேண்டும் என்றனர்.