districts

img

மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி அமைத்துத்தர வலியுறுத்தி சிஐடியு மனு

சேலம், மே 16- ஏற்காடு அருகே 6 ஆம் நம்பர் பீல்டு மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டச் சேடு மோனாங்குழி காடு 6 ஆம் நம்பர் மண்  சாலையை, தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 40 ஆண் டுகளுக்கும் மேலாக அப்பகுதி பழங்குடியின மக்கள் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சனை சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தார்ச்சாலை அமைக்க வேண்டும் என தீர்ப்பு  கிடைத்தது. இதைத்தொடர்ந்து பழங்குடி யினர் நலத்துறை சார்பில் விரிவான அறிக்கை  தயாரிக்கப்பட்டு, அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமன்-னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தார்ச்சாலை அமைக்க மாவட்ட ஆட்சி யர் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், அதன் பிறகு சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப் பேற்ற செ.கார்மேகம், பழங்குடி மக்களின் கோரிக்கையை அமல்படுத்தாமல், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், தனியார் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக 7  ஆம் நம்பர் பகுதியில் தார்ச்சாலை அமைத் துள்ளார். மக்களுக்கு பயனில்லாத 7 ஆம் நம்பர்  பீல்ட் சாலையை, அப்பகுதி மக்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழலே  நிலவி வருகிறது. எனவே, மக்கள் கோரிக் கையான 6 ஆம் நம்பர் மண்சாலையை, தார்ச்சாலையாக மாற்றி அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மாவட் டத் துணைத்தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன் தலைமையில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவை பெற்ற  அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.