திருப்பூர், ஜன.11- அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய டிட்டோஜாக் அமைப்பினர் திருப்பூர், அவிநாசி ஆகிய பகுதிக ளில் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பள்ளி கல்வி இயக் குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழு உடன் நடத்திய பேச்சுவார்த் தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணை யினை உடனடியாக வெளியிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் அமைப்பினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்: திருப்பூர் தெற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு டிட்டோ ஜேக் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் கனக ராஜா தலைமையில் நடைபெற்ற உந்த ஆர்ப்பாட்டத்தில் மரியபிரா காஷ், ராஜேஷ், சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர். அவிநாசி: அவிநாசியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெள்ளி யங்கிரி தலைமை வகித்தார். இதில், நடராஜ் ரமேஷ் குமார், செந்தில்கு மார், ராமகிருஷ்ணன், சுசிலா, ஜெய லட்சுமி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.