districts

ரேசன் அரிசியை கடத்தி மாவாக அரைத்து விற்பனை – மூவர் கைது

மேட்டுப்பாளையம், டிச.6- மேட்டுப்பாளையம் அருகே ரேசன் அரிசை கடத்தி அதனை மாவாக அரைத்து விற்பனை செய்து வந்த மூவர்  கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தாசம்பாளையம் சாலையோரம் உள்ள செந்தில்குமார் என்ப வருக்கு சொந்தமான வீட்டில் ரேசன் அரிசி கடத்தி வந்து  அதனை மாவாக அரைத்து விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மேட்டுப்பாளையம் வட்ட வழங்கல் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு ஆய்வு நடத்த சென்றனர். அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்த வடமாநில இளைஞர்கள் இருவர் தப்பியோட, மூவர் பிடி பட்டனர். வீட்டினுள் சென்று ஆய்வு நடத்தியபோது, அங்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசி மூட்டை  மூட்டையாக இருப்பதும், அதனை அங்கிருந்த இயந்திரம் மூலம் மாவாக அரைத்து வருவதும் கண்டறியப்பட்டது.  இதனையடுத்து பிடிபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த  தேவா, பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த  நவநீதன் மற்றும் லோகநாதன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த ரேசன் அரிசி மூட்டை கள், அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள், மாவு அரைக்கும் இயந்தி ரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அதிகாரி கள் பிடிபட்ட மூவரை உணவு பொருள் கடத்தல் பிரிவு  காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தப்பியோ டியவர்களை தேடும் பணியும், ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணையும் நடத்தப் பட்டு வருகிறது.

;