districts

img

மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது

கோவை, அக்.15- கன மழையின் காரணமாக மின்  விநியோகத்தில் எந்த பாதிப்பும்  இருக்காது என அமைச்சர் செந் தில் பாலாஜி உறுதியளித்தார்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் மற்றும்  மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்  பாலாஜி தலைமையில் பருவ மழை  முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்  குறித்த ஆலோசனை கூட்டம் செவ் வாயன்று நடைபெற்றது. இதில்,  மாவட்ட ஆட்சியர் கிராந்தி் குமார்  பாடி, மாநகராட்சி ஆணையர் சிவ குருபிரபாகரன், கோவை மக்க ளவை உறுப்பினர் ராஜ்குமார்,  மேயர் ரங்கநாயகி மற்றும்  அனைத்துத் துறை அதிகாரிகளும்  பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பருவமழை முன் னெச்சரிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதல்  கொடுத்துள்ளனர். கோவையில் இரு தினங்களில் பெய்த மழை  காரணமாக மக்களுக்கு எந்த வித மான பாதிப்பும் இல்லாத வகையில்  சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. பெரிய அளவில்  மழை பெய்தாலும் ஒரு சில மணி  நேரங்களில் தண்ணீர் அகற்றப் பட்டு, இயல்பு நிலைக்கு பாதிப்பு  இல்லாத வகையில் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. மழையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் முதலே தேவையான பணிகளை செய்து வருகின்றோம். கோவையில் மழை பாதிப்புகள்  குறித்த செய்திகளை வெளியிடு வதை போல, அரசு மேற்கொள் ளும் துரித நடவடிக்கைகள் குறித் தும் ஊடகங்கள் செய்திகள் வெளி யிட வேண்டும். ஒரு தரப்பு செய் தியை மட்டும் வெளியிடுவது போல  தோற்றம் இருக்கின்றது. ஏற்கனவே  மின்சாரத் துறை பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும்  தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளது. சென்னை, கோவை உட்பட  அனைத்து இடங்களிலும் மின்சார  விநியோகத்தில் எந்த பாதிப்பும்  இருக்காது. உயிரிழப்பு ஏற்படாத  வகையில் நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றது. இதுவரை  மின்விநியோகத்தில் பாதிப்பு  இல்லை, சீரான மின்விநியோகம்  வழங்கப்படும். மின்வாரியம் சார் பில் மரக்கிளைகள் அகற்றுவது என  15 லட்சம் பணிகள் நடைபெற்றுள் ளது. மின் கம்பிகள் அறுந்து உயிர்  சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என் பதற்காக முன்னெச்சரிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற் படுத்தபடுகின்றது. மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் கடந்த காலங்களை விட தற்போது குறைந்துள்ளது. வரும் ஆண்டுக ளில் இது போன்ற பாதிப்புகள் இருக்காது. தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும்  உயர் அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்  அப் குழுக்கள் ஏற்படுத்தபட்டு, பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது, என்றார்.