districts

img

தாராபுரத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்; அச்சத்தில் பொதுமக்கள்

தாராபுரம், செப். 9- திருப்பூர் மாவட்டம் தாராபுரத் தில் வீட்டின் பூட்டை உடைத்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகும் சம்பவங்களால் பொதுமக்கள் அச் சத்தில் உள்ளனர். தாராபுரம் எல்லீஸ் நகர் டி.எஸ்.எம். நகரைச் சேர்ந்தவர் விஜயன் (67)  பால் வியாபாரம் செய்து வருகிறார்.  இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் கார்த்திகேயன். சம்பவத்தன்று காலை விஜயன் பால் வியாபாரம் செய்ய வெளியில் சென் றுவிட்டார். மனைவி விஜயலட்சுமி காய்கறி வாங்குவதற்காக உழவர் சந் தைக்கு சென்றுவிட்டார். மகன் கார்த் திகேயனும் வீட்டை பூட்டிவிட்டு நடை பயிற்சிக்கு சென்றுவிட்டார். இதை  நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வர வேற்பறையில் இருந்து அரை பவுன்  கம்மல் மற்றும் 60 கிராம் மதிப்புள்ள வெள்ளி பிரேஸ்லெட்டையும் திரு டிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து அரு கில் உள்ள பத்மாவதி நகரில் நிதி நிறுவனம் நடத்திவரும் நாச்சி முத்து என்பவரது வீட்டில் கிரில் கேட்டை உடைத்து திருட முயற்சி செய்தபோது அவர் சத்தமிட்டதும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இதனைத்  தொடர்ந்து ஆர்.கே.ஆர். நகரில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவ ரது மனைவி தேவிகா. இவர்களது வீட் டின் கதவை உடைக்க முயன்றபோது  சத்தம் கேட்டு எழுந்த தேவிகா, வெளியே வந்து அடையாளம் தெரி யாத நபரை பிடிக்க முயன்றபோது அடையாளம் தெரியாத நபர் தேவிகா வின் கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த தொடர் சம்ப வங்கள் குறித்து பொதுமக்கள் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவ லையடுத்து சம்பவ இடத்தில் போலீ சார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து விஜயன், நாச்சிமுத்து, சுரேஷ்குமார் ஆகிய 3 பேரும் சம்ப வம் குறித்து புகார் அளித்தனர். புகா ரின்பேரில் குற்றப்பிரிவு உதவி ஆய் வாளர் முத்துக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தாராபுரம் பகுதியில் கடந்த 6  மாதங்களில் மட்டும் 20க்கும் மேற் பட்ட கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது. இதில்  சில வழக்குகளில் மட்டும் குற்றவா ளிகள் பிடிபட்டுள்ளனர். தொடர்ந்து திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்ப வங்கள் நடப்பது பொதுமக்கள் மத்தி யில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக் கையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட  குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை கள் அமைக்கப்பட்டு தேடி வருகி றோம்.  கடந்த சிலநாட்களுக்கு முன்பு  கொளத்துப்பாளையத்தை சேர்ந்த ரபிதீன் வீட்டில் நகைகளை திருடிச் சென்ற நபர்களை அடையாளம் கண் டுள்ளோம். விரைவில் அவர்களை பிடித்துவிடுவோம் என  தெரிவித்த னர். திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் முறை யாக ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் திருட்டு வழக்கு களில் குற்றவாளிகளை கைது செய்ய  தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து  தெரிவித்துள்ளனர்.

;