வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

img

தொழிலாளர் வர்க்கம் தோற்றதாக சரித்திரம் இல்லை சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேச்சு

கோவை, ஜன. 22 – உரிமைக்கான போராட்டத் தில் தொழிலாளி வர்க்கம் ஒரு போதும் தோற்றதில்லை.

வே ளாண் விரோத சட்டத்தை எதிர்த்து கோவையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேசினார். கோவை காந்திபூங்கா பகுதி யில் அனைத்து தொழிற்சங்கங் களின் சார்பில் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எல்பிஎப் ரத்தின வேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் பங்கேற்று பேசுகையில், புரட்சி என்பது மக்கள் பங்கேற்கும் திருவிழா என்பார் புரட்சியாளர் லெனின். அதுபோன்றுதான் தலைநகர் தில்லியில் விவசாயி கள் நடத்துகிற போராட்டம் திரு விழாவைப் போல் நடைபெற்று வருகிறது. மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத  நடவடிக்கைகளை கண்டித்து  அனைத்து மத்திய தொழிற்சங்கங் களும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறை கூவல் விடுத்தது.

அதேநாளில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தலைநகரை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்தது.  தலைநகரை நோக்கி வந்த விவ சாயிகளின் போராட்டத்தை தடுப் பதற்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண் டது. கடும் குளிரில் போராடுபவர் கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தார் கள். சாலையை மறித்து முள்வேலி அமைத்தார்கள்.

 ஆனால், விவ சாயிகள் ஒருபோதும் சாலையை மறிக்கவில்லை. அதிகார வர்க்கத் தில் உள்ளவர்கள்தான் விவசாயி களின் போராட்டத்தை ஒடுக்க சாலையை மறித்து தடுத்தார்கள். போராட்டத்திற்கு வந்த ஒரு லட்சம் விவசாயிகளை தடுத்த பின்னர் இப்போது பல லட்சமாக மாறி யுள்ளது. இதுமேலும் குடும்பம், குடும்பமாக திரளும் நிலை ஏற் பட்டுள்ளது. இதனால் விவசாயி களின்  போராட்டம் இன்று  திருவிழாவாக மாறியுள்ளது.

நாளுக்குநாள் இப்போராட்டத் திற்கு ஆதரவு பெருகிவருகிறது.  விவசாயிகளுக்கு விரோத மான அந்த மூன்று சட்டங் களையும் மோடி அரசு திரும்ப பெற வேண்டும் என்பது மட்டுமே எங் களது ஒற்றை கோரிக்கை. இக் கோரிக்கையை வெல்ல ஆறு மாத காலமானாலும் பரவாயில்லை. இந்த அரசை இரண்டில் ஒன்று பார்த்துவிட்டுத்தான் திரும்பு வோம் என்கிறார்கள். ஒன்று சட் டத்தை திரும்பப் பெறு, இல்லை யேல் தில்லியை  எங்களிடம் விட்டுவிடு என்பதே விவசாயி களின் நிலைப்பாடு.  இந்த விவசாயிகளின் போராட் டத்தின் அனுபவத்தை, தொழி லாளி வர்க்கம் கற்றுக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இப் போது மத்திய அரசு ஒன்றரை வருடம் இந்த சட்டத்தை நிறுத்தி வைக்கிறோம் என்கிறார்கள்.

ஆனால், இதனை விவசாயிகள் ஏற்கவில்லை.  ஒத்திவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு  மூன்றே நாட்களில் நடைமுறைப்படுத் தினால் என்ன செய்வது. இந்த அரசை நம்ப முடியாது. கடந்த காலங்களில் இவர்கள் சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை. இவர்கள் தேர்தல் அறிக்கை யிலேயே சொன்னதை மீறியவர் களாயிற்றே. சுவாமிநாதன் அறிக்கை நிறைவேற்றுகிறோம் என்று சொன்னார்கள். கொள் முதலை அதிகப்படுத்துகிறோம் என்று சொன்னார்கள். எது வுமே நிறைவேற்றவில்லை என் பதை தற்போது போராட்டத் தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நன்கு உணர்ந்துள்ளனர்.

அதேநேரம், இது விவசாயிகள் போராட்டம் என தள்ளிவைத்து விடக்கூடாது. இந்த சட்டத்தால்  எப்சி குடோன்கள் மூடப்படும். இப்போதே எப்சி குடோன்கள்  மூடப்பட்டு ரிலையன்ஸ் நிறுவ னத்திடம் கைமாற்றப்பட்டுள் ளதாக தகவல்கள் வருகிறது. ரே சன் கடைகள்  இருக்க போவ தில்லை. ஆட்டை கடித்து, மாட் டை கடித்து, மனிதனை கடிக்கும் கதையாக இது தொடரும். ஆகவே, தொழிலாளி வர்க்கம் சக்திமிக்க வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஜன வரி 26 ஆம் தேதியோடு இந்த  போராட்டம் முடியாது. தொடர்ந்து  வலுவாக நடத்த வேண்டியுள்ளது. தொழிலாளி வர்க்கம் தோற்றதாக உலக சரித்திரத்திலேயே இல்லை. அத்தகைய நெஞ்சுரத்தோடு நம் போராட்டத்தை முன்னெடுப் போம். விவசாயிகளின் கோரிக் கையை வென்றெடுக்க துணை நிற் போம். இவ்வாறு ஜி.சுகுமாறன் பேசினார்.

முன்னதாக, இந்த போராட்டத் தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, எஸ்.ஆறுமுகம், ஏஐடியுசி எம்.ஆறுமுகம், சி.தங்க வேல், ஏஐசிசிடியு லூயிஸ், எம்எல் எப் மு.தியாகராஜன், எச்எம்எஸ் மனோகரன், ஐஎன்டியுசி தேவ ராஜ், எஸ்டிடியு ரகுபுரி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

சேலம்

வேளாண் விரோத சட்டங் களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்பிஎப் செயலாளர் பழனியப் பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சாலை போக்குவரத்து மாநில துணைத் தலைவர் எஸ். கே .தியாக ராஜன், சிஐடியு மாவட்ட செய லாளர் டி. உதயகுமார், மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம், மாநிலக் குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி, துணைத் தலைவர் பி .தங்கவேலு, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் முனுசாமி, ஐஎன்டி யுசி வடமலை, ஏஐசிசிடியு வேல் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

;