districts

img

நில உரிமைக்காக மலைவாழ் மக்கள் போராட்டம்

பொள்ளாச்சி, நவ.24- பழங்குடியின் மக்களின் நில உரி மையை காத்திட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். 2006 வன உரிமைச் சட்டத்தை உடன டியாக அமுல்படுத்திட வேண்டும். அனைத்து பழங்குடி மக்களுக்கும் கால தாமதமில்லாமல் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும். 2020 சுற்றுச்சூழல் அறிக்கையை கைவிட வேண்டும். நிலப்பட்டா, வீட்டு மனைப்பட்டா வழங்கி கேரள அரசைப் போன்று ரூ. 6 லட்சம் மதிப்பிலான தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும். உள் ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கிட வேண்டும். குடியிருப்புப் பகுதிக ளுக்குள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை  வசதிகளை நிறைவேற்றிட வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு மலை வாழ் சங்கத்தி னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, வட்டாட்சியர் வெங்கடாச்சலம் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலை வர் வி.எஸ்.பரமசிவம், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்,தங்கவேல், மல்லிகா, டி,நாகராஜ், ஆனைமலை தாலுகா தலை வர் ஏ.அம்மாசை, செயலாளர் கே.பத்மினி  ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, மேற்கண்ட கோரிக்கைகள் மீது உரிய நட வடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டாட்சி யர் உறுதியளித்தையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  இப்போராட்டத்தில் 150 க்கும் மேற் பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

;