ஏலத்தின் வாசம் சொல்கிறது என் வாழ்வின் சந்தோஷ தருணங்களை!
கடுகும் உளுந்தும் சொல்கிறது என்னை அலங்கரித்த அந்த அழகிய நிமிடங்களை!
பெருங்காயம் சொல்கிறது என் மனக் காயங்களை!
சீரகமும் மிளகும் சொல்கிறது காயத்திற்கான மருந்துகளை!
உப்பிருக்கும் அறையில் கொஞ்சம் தப்பி நிற்கிறது என் கண்ணீர்த் திவலைகள்!
மிளகாய் இருந்த அறை கூவிச் சொல்கிறது என் கோபதாபங்களை!
எனக்குள் மட்டுமல்ல
உனக்குள்ளும் இருக்குமே அந்த அஞ்சறைப்பெட்டி!
ஸ்ரீதேவி, சென்னை