கோவை, பிப்.25- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2003 ஏப்ரல் 4 தேதிக்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற் போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட் டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதி யத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், தூய் மைப் பணியாளர்கள், தொகுப்பு ஊதி யத்தில் பணியாற்றும் எம்ஆர்பி செவி லியர்கள் உள்ளிட்டோருக்கு வரைய றுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண் டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண் டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவ தும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், தெற்கு வட்டாச்சியர் அலு வலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன், தமி ழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செய லாளர் மா.ராஜசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ப.செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து துறைவாரி சங்கங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ச. விஜயமனோகரன், பி.சரவணன், அ. மதியழகன், பி.எஸ்.வீராகார்த்திக், அ. ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித் தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ச. நேரு உள்ளிட்டோர் உரையாற்றிறனர். இதில், திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஜாக்டோ - ஜியோ ஒருங்கி ணைப்பாளர்களான, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநா தன் மற்றும் துறைவாரியான சங்கங்க ளின் தலைவர்கள், பி.எம்.கெளரன், கே. பாஸ்கரன், ராசா ஆனந்தன், பெஞ்ச மின், க.சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், ஜாக்டோ – ஜியோ மாவட்ட நிதி காப்பாளர் கே.புக ழேந்தி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட் டணி மாநில பொதுச்செயலாளர் கோ. காமராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். ஆர்ப்பாட் டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
சேலம்
சேலம் கோட்டை மைதானம் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ந.திருவேரங்கன், பி.கோவிந்தன், சி.முருகவேல், பு. சுரேஷ், சங்கர் ஆகியோர் தலைமை வகித் தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பி னர் அண்ணா குபேரன் துவக்கவுரை யாற்றினார். அரசு ஓய்வுபெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.சுப்பிர மணியம் கண்டன உரையாற்றினார். இதில் ஏராமானோர் கலந்து கொண்ட னர். ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங் கிணைப்புக்குழு உறுப்பினர் பொன்.செல்வராஜ் நிறைவுரையாற்றினார்.
நாமக்கல்
நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.