districts

img

ஒத்திவைக்கப்பட்ட தீர்மானத்திற்கு முன் அனுமதியா?

கோவை, ஜூலை 26- திடக்கழிவு மேலான்மையை தனியாருக்கு ஒப்படைக்கும் விவ காரத்தில், ஒத்திவைக்கப்பட்ட தீர் மானத்திற்கு முன் அனுமதி கொடுத்த கோவை மாநகராட்சி மேயரின் நட வடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி உள் ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பி னர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து, வருகிற மாமன்ற கூட்டத்தில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்படும் என கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உறுதி யளித்துள்ளார்.  கோவை மாநகராட்சியில், தூய் மைப்பணிகளை (திடக்கழிவு மேலாண்மை) தனியாருக்கு அவுட் சோர்சிங் விடுவது தொடர்பாக  கடந்த மாமன்ற கூட்டத்தில் பொருள் எண் 25ன் கீழ் தீர்மானம் முன்மொழி யப்பட்டது. மாமன்ற கூட்டம் துவங் கும் நேரத்தில்தான் இப்பொருட் கள் குறித்த நகல், மாமன்ற உறுப்பி னர்களுக்கு வழங்கப்பட்டது. முக்கி யத்துவம் வாய்ந்த பொருள் குறித்த விபரம் கூட்ட அரங்கில் வழங்கிய  நடைமுறை சரியானதல்ல என்ற னர். மேலும், இத்தீர்மானம் மாமன் றத்தில் முன்மொழியப்பட்டபோது, ஆளும் கட்சி, சிபிஎம், சிபிஐ, காங் கிரஸ், மதிமுக உட்பட பெரும்பா லான உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து, இத் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், ஒத்திவைக்கப் பட்ட தீர்மானம் குறித்து மாமன்றத் தில் விவாதிக்கப்படாமல் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா இப் பொருளுக்கு முன் அனுமதி வழங்கி யுள்ளார். இது சிபிஎம், சிபிஐ, காங் கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப் பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர்.

இதனையடுத்து, கோவை மாந கராட்சி மேயர் கல்பனாவை புத னன்று காங்கிரஸ் கட்சியின் மாமன்ற குழு துணை தலைவர் சரவணக் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற குழு தலைவர் வி.ராம மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற குழு தலைவர் மல் லிகா புருசோத்தமன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர். அதில், ஒத்திவைக்கப்பட்ட பொருளுக்கு முன் அனுமதி வழங் கப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளானோம். நாளொன்றுக்கு மக் கள் வரிப்பணம் ரூ 40 லட்சம் செல விடுவதை மன்றத்தில் விவாதிக்கா மல் நடைமுறைப்படுத்துவது, மாமன் றத்தை, மக்கள் பிரதிநிதிகளை, ஜன நாயத்தை புறந்தள்ளுவதாகவே நாங் கள் கருதுகிறோம். இந்த நடை முறையை ஏற்றுக் கொள்ள முடி யாது. எனவே, ஒத்தி வைக்கப்பட்ட தீர்மானத்தை மீண்டும் அவைக்கு முன்மொழிந்து நிறைவேற்றும் வரை இப்பொருள் சார்ந்த நடவடிக்கை களை நிறுத்தி வைக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.  அம்மனுவை பெற்றுக்கொண்ட  மேயர் கல்பனா, வருகிற 31 ஆம்  தேதி நடைபெறும் மாமன்ற கூட்டத் தில் ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம் குறித்து விரிவாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என உறுதி யளித்தார். முன்னதாக, மாமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்கை யில், ஆளும்கட்சி குழு தலைவர் கார்த்திகேயன் உடனிருந்தார்.