districts

பொய்ப் பேட்டி அளிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்ட தமிழிசை

சென்னை,மே 14-பாஜகவுடன் கூட்டணி வைக்க தாம் பேசுவதாக நரேந்திர மோடியும் தமிழிசையும் நிரூபித்தால், அரசியலில் இருந்து விலகத் தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். ஆனால் தன் மீதான புகாரை நிரூபிக்காவிட்டால் அவர்கள் இருவரும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் ஸ்டாலின் பதிலடியாக கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மோடியுடன் தாம் கூட்டணி பேசி வருவதாக, “பச்சைப் பொய்” நிறைந்தஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித் திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பாரம்பரியமான அரசியல் குடும்பத் தில் பிறந்த தமிழிசை, இப்படியொரு “பொய்” பேட்டியை அளிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டதை நினைத்துவேதனைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திமுக தான். மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வரவே கூடாது எனத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என செய்திக்குறிப்பே வெளியிட்ட பின்னரும், ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்தும் திமுகவின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என தப்புக் கணக்குப் போட்டு, தமிழிசை உள்நோக்கத்தோடு பேட்டியளித்துள்ளார்.அ.தி.மு.க- பா.ஜ.க போல் திரை மறைவில் “தரகு” பேசும் கட்சி, திமுக கிடையாது. கொள்கையை, யார் பிரதமர் வேட்பாளர் என்பதை தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி திமுக. பாஜகவுடன் கூட்டணி வைக்க, தாம் பேசுவதாக, நரேந்திர மோடியும், தமிழிசையும் நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகத் தயார்என்றும் தன் மீதான புகாரை நிரூபிக்கா விட்டால், அவர்கள் இருவரும் அர சியலை விட்டு விலகத் தயாரா? இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.