ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

districts

சிறுமியை மிரட்டி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கோவை. ஜன. 5– கோவையில் சிறுமியை மிரட்டி பாலி யல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். கோவை நீலம்பூர் அருகே பெற்றோரை இழந்த 13 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரு கிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற குஞ்சான் (26), சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு சென்று சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு சிறுமி வீட்டில் தனியாக இருக் கும்போது அங்கு சென்ற சதீஷ்குமார் சிறு மியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய் துள்ளார்.  அப்போது, சிறுமி கூச்சலிடவே அரு காமை வீட்டார் சதீஷ்குமாரை பிடித்து, சர மாரியாக அடித்து குழந்தைகள் நல அமைப் புக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் சதீஷ் குமாரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பொதுமக்கள் தாக்கியதில் காயம டைந்த சதீஷ்குமார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

;