districts

img

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அணி மகத்தான வெற்றி பெறும் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உறுதி

கோவை,ஜன.22– தமிழகத்தில் அதிமுக, பாஜக மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்த லில் திமுக தலைமையிலான அணி நாடா ளுமன்ற தேர்தல் வெற்றியைப்போல் முழுமையான வெற்றியை பெற்று ஆட்சி யமைக்கும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை மதுக்கரை ஒன்றியம், மலு மிச்சம்பட்டியில் பாரதி புத்தகலாயத்தின் புத்தக விற்பனை மையத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் திறந்து வைத்தார். அப் போது அவர் பேசுகையில், வாசிப்பு என்பது சுவாசிப்புக்கு இணையானதா கும். சுவாசிப்பு நின்று போனால் எப் படி வாழ முடியாதே அதேபோன்று வாசிப்பு இல்லையென்றால் முழுமை பெற்ற மனிதனாக இருக்க முடியாது.

அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதனை மக்களின் வாழ்விய லோடு பொருத்தி பார்த்து களப் பணியாற்ற வேண்டும் என்றார்.  மேலும், அவர் பேசுகையில், தில்லி யில் நடைபெறும் விவசாயிகள் போராட் டம் வரலாற்றில் இடம் பிடிக்கும். விவ சாயிகளின் உணர்வுமிக்க ஒற்றுமை யான போராட்டத்தினால் இப்போது மத்திய அரசு இந்த விவசாய விரோத சட்டங்களை 18 மாதம் ஒத்திவைக்கி றோம் என்கிறார்கள். ஆனால், விவசாயி கள் இதனை ஏற்கவில்லை. மூன்று  சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியோடு தெரிவித்து விட்டனர். விவசாயிகள் டிராக்டர் பேர ணிக்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதனை தடுக்க வேண்டும் என மத்திய அரசு நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என தெரி வித்துவிட்டது. இதனால் மோடி தலை மையிலான பாஜக அரசு தற்போது திணறிக் கொண்டிருக்கிறது. 

இடதுசாரிகளுக்கு சாதகமான சூழல்

தற்போது சர்வதேசிய, தேசிய, தமிழக அளவில் இடதுசாரிகளுக்கு சாத கமான சூழல் நிலவுகிறது. உதார ணமாக, கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாய முன்னணியின் ஆட்சி குறித்து பாஜக வும், காங்கிரஸ் கட்சியும் பல்வேறு அவ தூறுகளை கூறியது. ஆனால், மக்களின் பக்கம் இடது முன்னணி ஆட்சி நிற்ப தால் இந்த அவதூறு பிரச்சாரங்கள் எடு படவில்லை. கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 30 ஆண்டுகளில் கிடைக்கப் பெறாத வெற்றியை இடது முன்னணிக்கு மக்கள் அளித்துள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றியம் அனைத்திலும் வெற்றியைப் பெற்றுள்ளோம்.  மேலும், அங்கு களத்தில் இடது முன்னணி நிறுத்தி வெற்றி பெற்ற வேட்பாளர்களில் பெரும்பகுதியினர் இளம் வயதுடைய ஆண்களும், பெண்க ளும் ஆவார்கள்.

குறிப்பாக, திரு வனந்தபுரத்தில் 21 வயதுடைய ஆர்யா  ராஜேந்திரன் மேயராக ஜொலிக் கிறார். இதேபோன்று பல பகுதிகளி லும் தலைவர்களாக இளம்வயதுடைய வர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தின் தலை மைப் பொறுப்பை ஏற்றுள்ளனர். இது பல ரது கவனத்தை பெற்றுள்ளது. இதே போன்று பீகாரில் இடதுசாரிகளின் வெற்றி, காஷ்மீர் வெற்றி, கர்நாடகம், மராட்டியம், ராஜஸ்தான் போன்ற மாநி லங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் இடதுசாரிகளின் அதிக எண்ணிக்கை யிலான வெற்றி பெற்றுள்ளனர்.

பணம் எப்போதும் வெற்றி பெறாது

இதேபோன்றே, தமிழகத்திலும் சாதகமான சூழல் நிலவுகிறது. அதி முக, பாஜகவிற்கு எதிரான மனநிலை யில் மக்கள் உள்ளனர். கடந்த நாடாளு மன்ற தேர்தல் வெற்றியைப்போல் முழு மையான வெற்றியை திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெறும். அதேநேரம், கடந்த காலம்போல் இல்லாமல், இப்போது வாக்காளர்களை விலைக்கு வாங்க மூட்டை மூட்டையாக பணத்தை கட்டிக் கொண்டு பலர் வருவார்கள். இதனைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை. தேர்தலில் பணம் எப்போதும் வெற்றி பெறாது. அப்படி பணம் வெற்றி பெறும் என்றால் அதிகாரத்தில் இருந்த அதி முக.தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இருக்கும். மக்கள் தங்கள் வாழ்க்கையோடு இணைத்தே எப்போதும் தேர்தலில் வாக்குகளை அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறி னார்.

முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப் பையா, கே.அஜய்குமார், மதுக்கரை ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;