districts

img

வார விடுமுறையிலும் ஊதியமின்றி பணி செய்ய நிர்பந்தம் தூய்மை பணியாளர்கள் ஆவேசம்

பொள்ளாச்சி, ஏப்.4-  வார விடுமுறை நாட்களிலும் பணி  செய்ய நிர்பந்திக்கப்படுவதுடன், ஊதியம் வழங்க மறுக்கப்படுவதாக கூறி  பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை ஒப் பந்த தூய்மைப் பணியாளர்கள்  முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் 500க்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனர். பொள் ளாச்சி நகரப்பகுதிகளில் சாக்கடை அடைப் புகளை சரி செய்வது, சேகரமாகும் குப்பை களை சேகரித்து தரம் பிரித்து அனுப்புவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்ற னர். இவர்களுக்கு, முகக்கவசம், கையுறை மற்றும் எவ்வித பாதுகாப்பு உபகரணங் களும் வழங்கப்படுவதில்லை என்றும், தின சரி 390 ரூபாய் என நிர்ணயம் செய்யப் பட்டிருந்தபோதும், ரூ.350 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பளம் இல்லா மல் பணிக்கு வர அதிகாரிகள்  வற்புறுத்து வதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாவ தாக கூறி 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன்பின்னர், நகராட்சி நிர்வாகத்தி னர், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி  உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த தையடுத்து, அனைவரும் கலைந்து சென்ற னர்.