districts

img

ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 15-  புதிய பென்சன் திட்டத்தை  ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தமிழ் நாடு முது நிலை  பட்டதாரி ஆசிரியர் கழகத்தி னர் ஈரோடு, முதன்மை கல்வி  அலுவலக வளாகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  புதிய பென்ஷன் திட் டத்தை ரத்து செய்ய வேண் டும்.

சம்பளத்துடன் கூடிய  விடுப்பை ஒப்படைப்பு செய்ய  வேண்டும். புதிய ஊதியக்கு ழுவில் முதுகலை ஆசிரிய ருக்கு ஊதிய விகிதத்தில் உரிய அங்கீகாரம் அளிக்க  வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஹ.சுதாகுமார் ஆர்ப் பாட்டத்துக்கு தலைமை வகித்தார். இதில், மாநில துணை தலைவர்கள் டி.எஸ்.பிரபா கரன், பி.சுப்புலட்சுமி, மாவட்ட மகளிரணி  தலைவர் ஆர்.பரிமளம், மாவட்டச் செயலா ளர் ஆ.இளங்கோவன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். 

உதகை

இதைபோல், கூடலூர் கருவூலத்தின் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், பரமேஸ்வரன் தலைமை வகித் தார். வட்டார இணைச் செயலாளர் வைரன்  முன்னிலை வகித்தார். கே.ஆர் செல்வி வர வேற்புரை ஆற்றினர். வி.கே.சஜி மாநிலச் செயலாளர் சுனில், செந்தில்குமார் அன்பழ கன் சிவபெருமாள் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.