districts

தருமபுரியில் 8,500 மண் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயம்

தருமபுரி, மே 29- தருமபுரி மாவட்டத்தில், நடப் பாண்டில் 8 ஆயிரத்து 500  மண் பரிசோதனை மேற்கொள்ள  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. தருமபுரி மாவட்டத்தின் பிர தான தொழிலாக விவசாயம் உள் ளது. மண்ணை பரிசோதனை செய்து சாகுபடி செய்தால் உரிய  விளைச்சல், மகசூல் கிடைக்கும்  என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற னர். மண் பரிசோதனை செய்வ தற்காக இம்மாவட்டத்திற்கான மண் பரிசோதனை மையம் தரும புரியின் மையப்பகுதியில் பழைய  நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள் ளது. 1972 ஆம் ஆண்டு தருமபுரி யில் மண் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது. இந்த மண் பரிசோதனை மையத்தில் உள்ள  ஆய்வகத்தில் 14 வகையான மண் பரிசோதனை மேற்கொள்ள ப்படுகிறது. நவீன உபகரணங் களின் உதவியுடன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அது போல் பாசன தண்ணீரும் இங்கு பரி சோதனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு 14,132 மண் பரிசோத னையும், 8 ஆயிரம் பாசன தண்ணீர்  வகை பரிசோதனையும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இயற்கை முறையில் விவசாயம் செய்தால் மட்டுமே பழைய விவசாய மண்ணை மீட்டெடுக்க முடியும். இல்லையென்றால் மண் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்டு மேலும் மலட்டுத்தன்மையடையும். மண் பரிசோதனை செய்திடுவோம், பயிர் விளைச்சல் பெருக்கிடுவோம் என்ற தலைப்பில் இப்போது மண் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. இதுகுறித்து வேளாண் உதவி  இயக்குநர் இளங்கோ கூறுகை யில், விவசாயம் மற்றும் எந்த வொரு கட்டுமானத்திற்கும் முன்  மண் பரிசோதனை செய்வது மிக முக்கியமான செயல்முறையாகும். மண் பரிசோதனை என்பது மண் ணின் தரம் மற்றும் தாங்கும் திறனை  ஆய்வு செய்வதாகும். மண்ணின் பண்புகள், தன்மை மற்றும் வினைத்திறன் ஆகியவற்றைக் கண்டறிய ஒரு புவி தொழில்நுட்ப  நிபுணர் மண் மாதிரிகளைச் சரி பார்ப்பது மண் பரிசோதனையா கும். மண் பரிசோதனை செய்யப் பட்ட உரங்களை வெவ்வேறு பயிர்களுக்கு உபயோகிக்கலாம். விவசாய நிலத்தின் மண் பரிசோ தனை செய்வதால், மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் நிலவரம் விவசாயிக்கு தெரியவ ருகிறது. இந்த நிலவரத்தினை அடிப்படையாக கொண்டு அதற்கு  ஏற்றாற்போல் பயிரிடுதல் நடக்கி றது. மண் பரிசோதனை மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு  உரமிடுதல், பயிரிடுதல், நீர்ப்பா சனம் ஆகியவை செய்யப்படுகி றது. ரசாயன உரங்கள், தேவைக் கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்க வேண்டும். சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோ தனை அவசியமாகும். பயிர் அறுவ டைக்கு பின் மண்ணில் உள்ள ஊட் டச்சத்துக்கள் குறைந்துவிடும். மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தினால் மண்வ ளம் குன்றிவிடும். எனவே மண் பரி சோதனை மூலம் மண் வளத்தை  அறிந்துகொள்வது அவசியமா கும். மண் வளத்தை நிலைநிறுத்து வதன் மூலம் பயிரின் உற்பத்தி  மற்றும் லாபத்தை மேம்படுத்த லாம். பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத்திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைத்திட வேண் டும். தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம். ஒரு மண் மாதிரி யின் ஆய்வு கட்டணம் ரூ.30  ஆகும். மனிதனுக்கு மருத்துவ சோதனை எவ்வளவு முக்கி யமோ, அதுபோல நிலத்திற்கும் மண் பரிசோதனை செய்வது அவசியம். நடப்பாண்டு 8500  மண் பரிசோதனை மேற்கொள்ள  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. அதன்படி, கலைஞர் அனைத்து கிராம திட்டத்தின் கீழ்  4800 மண் பரிசோதனையும், “ஒருப யிர் ஒரு கிராமம்” திட்டத்தின் கீழ்  3700 மண் பரிசோதனையும் மேற் ்கொள்ளப்பட உள்ளது, என்றார்.

;