districts

img

தாராபுரம் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மாற்று இடம் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

தாராபுரம்,  ஜூலை 7- தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகி றது. இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுமார் 100  ஆண்டு பழமை வாய்ந்த இந்த மார்க்கெட்டை இடித்து புதிய  வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து  வருகிறது. இந்நிலையில் இந்த மார்க்கெட்டில் உள்ள 100க்கும் மேற் பட்ட காய்கறி வியாபாரிகளை காலி செய்யச் சொல்லி உள்ள னர். மாற்று ஏற்பாடாக வியாபாரத்திற்கு ஏதுவான இடம்  காய்கறி வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடத்தில்  மின்வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.  புதிய வணிக வளாகம் கட்டிய பிறகு தற்போது கடையை நடத்தி வருவோருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக்  கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆணையாளர் ராமர், இவர்க ளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்று வியாபாரிகள் கலைந்து சென்றனர்.