அமராவதி ஆறு சங்ககால இலக்கியங்களிலும், இந்திய புராண இதிகாசங்களிலும் தொடர்புடைய நதியாகும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தமிழ் நாடு கேரளா எல்லையில் உற்பத்தியாகி திருப்பூர் மாவட்டம் வழியாக கரூர் மாவட்டம் வரை சுமார் 282 கி.மீட்டர் தூரம் பாய்ந்தோடி காவிரியில் கலக்கிறது. காவிரி ஆற்றின் முக்கியமான துணை ஆறுகளில் அம ராவதி ஆறும் ஒன்றாகும். திருப்பூர் மாவட்டம் உடு மலைப்பேட்டை அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும், குடிநீர் வசதியும் பெறுகிறது. அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அலங்கியம், தாராபுரம் நகர், கொளிஞ்சிவாடி, வீராட்சிமங்கலம், தாளக்கரை வழியாக கரூர் மாவட்ட எல்லைக்குள் செல்கிறது.
தாராபுரம் நகர்ப்பகுதியில் அம ராவதி ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு கடந்த பாலம் ஒன்றும் இருக் கிறது. அதே போல் ஆறு செல்லும்அகஸ்தீசுவரர் கோயில் அருகே ஒரு பாலமும், திருப்பூர் - ஒட்டன்சத்திரம் சாலை யொட்டி ஆறு செல்லும் வழியில் குறுக்கே ஒரு பால மும் உள்ளது. இதில் பிரிட்டிசார் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பாலத்தின் வழியாக போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு பாலங்களின் வழியாக போக்குவரத்து இருக்கிறது. திருப்பூர் ஒட்டன்சத்திரம் சாலையில் அமராவதி ஆற்றின் குறுக்கே சில ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் கீழ்ப்பகுதியில் மக்கள் குளிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் உள்பட 4 பேர் செல்பி எடுக்க சென்று உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
இதையடுத்து அப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக போடப் பட்ட திருப்பூர் - ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை யில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் கீழ்பகுதியில் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் குளிக்க செல்வ தும், அப்போது நீரில் மூழ்கி உயிரிழப்பது தொடர்கதை யாகியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 27க்கும் மேற்பட்டோர் குறிப்பிட்ட பகுதியில் குளிக்க சென்று உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் ஆய்வு செய்தபோது தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக பாலம் கட்டும் பணி மேற்கொண்டபோது அதன் கட்டுமான பணிக்காகவும் பாலத்தின் தூண்களை அடிப்பகுதியை பலப்படுத்து வதற்காகவும், கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் வாக னங்கள் ஆற்றுக்குள் செல்வதற்கு ஏதுவாக அப்பகுதி யில் இருந்த மணல் சுமார் 30 அடி வரை எடுக்கப்பட்டுள் ளது. பாலத்தின் கீழே நான்கு இடங்களில் இதுபோல 100 அடி அகலத்தில் 30 அடி ஆழம்வரை தோண்டி மணல் எடுக்கப்பட்டுள்ளது. பாலப்பணிகள் முடிந்த பின்பு அந்த குழிகளை அப்படியே விட்டுவிட்டனர்.
அத்தோடு அதே பகுதியில் மணல் திருட்டும் நடை பெற்றிருக்கிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து குறையும்போது அப் பகுதி பார்ப்பதற்கு அழகாக தனித் தீவு போல காட்சி யளிக்கும். இப்பாலம் வழியாக பயணிப்பவர்கள், பாத யாத்திரை செல்பவர்கள் மற்றும் குடிபோதை ஆசாமி கள் ரம்மியமாக காட்சியளிக்கும் தண்ணீரை பார்த்த வுடன் ஆபத்து அறியாமல் எச்சரிக்கை பலகையையும் அலட்சியப்படுத்தி குளிக்க செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் ஆழமான குழி உள்ள பகுதிக்கு செல்லும் போது 30 அடி ஆழத்தில் சிக்கி கொள்கின்றனர். அவர்களுடன் செல்பவர்கள் நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செல்லும்போது அவர்களும் மூழ்கி உயிரி ழக்கின்றனர். எனவே நிரந்தர தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் உள்ள குழியை மூடி ஆற்றுப்பரப்பை சமதளமாக மாற்ற வேண்டும். அதற்கு உரிய நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திட வேண்டும். மேலும், எச்சரிக்கை பலகை வைத்து உயிர்பலியா வதை தடுக்கவேண்டும். ரோந்து போலீசாரும் அப்பகுதி யில் கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப் பாக இருக்கிறது. தமிழக அரசு நடவடிக்கை எடுக் குமா? -ஆர்.ராஜா