districts

img

இந்தியை திணிப்பதா ? மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.18 - இந்திய ஒருமைபாட்டிற்கு எதிரான ஒன்றிய அரசின் இந்தி  திணிப்பை கண்டித்து செவ்வாயன்று இந்திய மாணவர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் தமிழக முழுவதும் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அறை கூவல் விடுத்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம்,  சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் கிளை தலைவர்  உதய ராஜ்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்ட தலைவர்  பிரவீன், கல்லூரி கிளை செயலாளர் சபரி, கல்லூரி கிளை உறுப்பினர்கள்  மற்றும்  கல்லூரி மாணவர்கள்   கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.