districts

img

டாக்டர் பட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுநர்

சேலம், அக்.21-  சுதத்திரப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவிற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த நிலையில், அதற்கான ஒப்புதலில் தமிழக ஆளுநர் கையெழுத்து இடாததை கண் டித்து இந்திய மாணவர் சங்கத் தினர், சேலத்தில், ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற நூறு ஆண்டு கடந்து வாழும் என்.சங் கரய்யா அவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரும் 22ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க பல்கலைக் கழக சிண்டிகேட் மற்றும் செனட்  உறுப்பினர்கள் ஒப்புதல் அளித் தனர். அதற்கான உத்தரவை தமிழக  ஆளுநர் கையெழுத்திட வேண்டி, பல்கலை கழகம் அவருக்கு கோப்புகளை அனுப்பி வைத்த நிலையில், தமிழக ஆளுநர் ரவி அந்த கோப்பில் கையெழுத்திட மறுத்துள்ளார்.  அடாவடி ஆளுநரின் போக்கு அரசியல் நோக்கர்களை மட்டு மன்றி, அனைத்து தரப்பிலும்  கடும் விமர்சனம் எழுந்துள்ளது.  விடுதலை போராட்டம், மக்களுக் கான உரிமைப்போராட்டங்களில் பங்கேற்று 9 ஆண்டுகாலம் சிறை வாசம், 2 ஆண்டு காலம் தலை மறைவு என தனது வாழ்நாள் முழு வதும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்து தியாக வாழ்வை மேற்கொண்டு வருபவர் தோழர் என்.சங்கரய்யா. அத்தகைய வாழும் வரலாற்றிற்கு, டாக்டர் பட்டம் வழங்குவதை தனது குறுகிய அரசியல் நோக் கத்திற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி  கையெழுத்திட மறுக்கிறார் என் பதே அனைவரின் கண்டத்திற்கு காரணமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய  மாணவர் சங்கத்தினர் ஆளுநருக்கு  பேனா அனுப்பும் நூதன போராட் டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க சேலம் மாவட்டக்குழு சார்பில், அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள தபால் நிலையத்தில் ஏராளமான மாணவர்கள் திரண் டனர். இதனையடுத்து, மாணவர்  சங்கத்தின் மாநில துணைத்தலை வர் சம்சீர் அகமது தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழக ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங் களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து தபால் தபால் நிலை யத்தில் ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட் டனர். இவ்வியக்கத்தில், இந்திய  மாணவர் சங்கத்தின் சேலம்  மாவட்டத் தலைவர் அருண்குமார்,  செயலாளர் பவித்ரன், மாநிலக் குழு  உறுப்பினர் ரம்யா உள்ளிட்டு எண்ணற்ற மாணவர்கள் பங்கேற் றனர்.