districts

img

மாநில அளவிலான சைக்கிள் போட்டி

கோவை, ஆக.13- சைக்கிள் அசோசியேசன் மற்றும் கோவை மாவட்ட  சைக்கிள் அசோசியேசன் இணைந்து நடத்திய “தமிழ்நாடு எம்டிபி சாம்பியன்ஷிப்” மாநில அளவிலான சைக்கிள் போட்டி  கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான எலெக்ட் சைக்கிள் பந்த யம் மற்றும் 18, 16, 14,12 வயதுக்குட்பட்டோருக்கான ஆண், பெண் இருபாலருக்குமான சைக்கிள் போட்டி என பிரிவு களில் நடைபெற்றது. இப்போட்டிகளில் சென்னை, கோவை, நீலகிரி, சேலம், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும்  தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற் பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். “ஆப் ரோடு”  எனப்படும் சாலை அல்லாத காடு மற்றும் மலை பகுதியில் நடைபெற்ற இந்த சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது முழு திறமையை வெளிக்காட்டும் விதமாக மிதிவண்டியில் சீறிப்பாய்ந்தனர். முன்னதாக, நடைபெற்ற போட்டியின் துவக்க விழாவில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் சைக்கிள் பந்தய போட்டியினை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டிக ளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடுத்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் படுவார் என தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.