districts

img

பில்லூர் அணையில் மின் உற்பத்தி துவக்கம்

மேட்டுப்பாளையம், ஜூலை 23- மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் நீர்வ ரத்தின் வேகம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீர் மின் உற் பத்தி பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைக்காடுகளை நீர்பிடிப்பு பகுதிக ளாக கொண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள மலை முகட் டின் நடுவே 1967 ஆண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. நூறு  அடி நீர்மட்ட உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீரே கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர்  மற்றும் பாசன ஆதாரமாக உள்ளது. பில்லூர் அணையில் இருந்து தினசரி நூறு மெகாவாட் நீர்மின் உற்பத்தியும் செய் யப்பட்ட நிலையில், இவ்வாண்டு கோடை வெயிலின் தாக் கம் முன்கூட்டியே துவங்கி மழை பெருமளவு குறைந்து போனது. இதனால், அணைக்கான நீர்வரத்து குறைந்து குடிநீர்  பயன்பாட்டிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் அணையின் நீர்  மின் உற்பத்தி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத் தில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த மாத இறுதி யில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை  காரணமாக கடந்த ஜூலை 16 ஆம் தேதி பில்லூர் அணை  அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதால், அணை யின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருவதோடு அணை யில் நீர்மின் உற்பத்தி பணிகளும் முழு வேகத்தில் துவங்கி யது. அணையின் உபரி நீர் கடந்த ஐந்து நாட்களில் வினா டிக்கு 21 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை அதன்  மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு. நீரின் வேகத்தை பயன்படுத்தி தினசரி 100 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டு  வருகிறது. ஞாயிறன்று முதல் அணைக்கான நீர்வரத்து குறைந்து வந்தாலும் இங்கு தடையற்ற நீர் மின் உற்பத் திக்கு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி  நீர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், திங்க ளன்று அணையில் 6 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றி  மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக பில் லூர் அணை நிரம்பி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்க ளின் குடிநீர் தேவையும் பூர்த்தி ஆவதோடு பல மாதங்க ளாக தடை பட்டிருந்த நீர்மின் உற்பத்தி பணிகளும் துவங்கி  உள்ளது.