கோவை, ஏப்.4 - கோவையில், டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற் றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4- க்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிறன்று துவங்கியது. டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு இணைந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை நடத்தி வரு கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக, இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிறன்று துவங்கப் பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கட் டிடத்தில் நடைபெற்ற இந்த துவக்க நிகழ்ச் சியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில துணை பொதுச்செயலா ளர் யு.கே.சிவஞானம் பங்கேற்று பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து பேசினார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பால்ராஜ், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் துளசிதரன், வங்கி ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி உரை யாற்றினர். இந்த துவக்க நிகழ்வில் நூற்றுக் கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண் டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க அலுவ லகத்தில் ஞாயிறன்று துவங்கிய இந்த பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடை பெறும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரி வித்துள்ளனர்.